news

News August 7, 2024

Google Chromecast-க்கு குட்பை.. இனி Google Tv Streamer

image

10 ஆண்டுகளுக்கும் மேலாக டெக் உலகை கலக்கி வந்த கூகுள் க்ரோம்காஸ்ட்டுக்கு குட்பை சொல்லி இருக்கிறது கூகுள். செல்போனில் உள்ள ஃபோட்டோக்கள், வீடியோக்களை டிவியில் பார்ப்பதற்காக கூகுள் க்ரோம்காஸ்ட் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதற்கு மாற்றாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கூகுள் டிவி ஸ்ட்ரீமரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

News August 7, 2024

அமைச்சர்களுக்கு எதிராக தீர்ப்பு: அதிமுக வரவேற்பு

image

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அதிமுக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில், நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இனி 2 பேரும் தப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

News August 7, 2024

Olympics: தகுதி நீக்கத்திற்கான காரணம் என்ன?

image

50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காலிறுதி, அரையிறுதிப் போட்டிக்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்ததாகவும், அதனால் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒலிம்பிக்ஸில் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

3rd ODI: இலங்கை பேட்டிங்

image

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான, 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற SL அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டி டை ஆன நிலையில், 2ஆவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் SL அணி முன்னிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் IND அணியும், தொடரை கைப்பற்றும் நோக்கில் SL அணியும் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News August 7, 2024

இன்று 8 மாவட்டங்களில் கனமழை

image

ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆக.11ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் 30-40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News August 7, 2024

திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

பிஜி நாட்டின் உயரிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெற்றிருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஜி நாட்டிற்கு சென்றுள்ள திரெளபதி முர்முவுக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான Companion of the Order of Fiji வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம் என்று கூறியுள்ளார்.

News August 7, 2024

ஹசீனா கட்சியினர் 29 பேரின் உடல்கள் மீட்பு

image

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின், அவரது ‘அவாமி லீக்’ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என இதுவரை 29 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்சியினரின் வீடுகள், தொழில் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு கும்பல் கும்பலாக படுகொலை செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசு பணிகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் அங்கு கலவரம் வெடித்தது.

News August 7, 2024

இந்த 7 பழக்கங்களால் சர்க்கரை நோய் உருவாகும் ஆபத்து

image

7 பழக்கங்களால் உடலில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரக்கூடும் என்று உடல்நல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். அவை என்னென்ன? 1) காலை நேர உணவை தவிர்ப்பது 2) ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வது 3) குறைவான நேரம் தூங்குவது அல்லது சரியான தூக்க வழக்கம் இல்லாதது 4) பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது 5) அதிக சர்க்கரையுடன் பானங்கள் பருகுவது 6) உடல்பயிற்சியின்மை 7) அதிக மன அழுத்தத்துடன் இருப்பது

News August 7, 2024

Olympics: வெள்ளிப் பதக்கம் யாருக்கும் இல்லை

image

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடைக் காரணமாக ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மற்றொரு மல்யுத்த வீராங்கனை சாராவுக்கு (அமெரிக்கா) தங்கப் பதக்கம் வழங்கப்படும். மூன்றாவது இடம் பெறும் மல்யுத்த வீராங்கனைக்கு வெண்கலம் வழங்கப்படும். இறுதிப் போட்டி நடைபெறாத காரணத்தால், இரண்டாவது இடத்துக்கான வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது.

News August 7, 2024

என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?

image

மக்களவைத் தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை இபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், அவரிடம் அதிமுகவை பலப்படுத்த ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் இபிஎஸ்ஸுக்கு நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் அடங்குவர் எனச் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!