news

News August 31, 2024

தமிழகத்திற்கு இன்று ‘டபுள் சர்ப்ரைஸ்’

image

TNக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
*எழும்பூர் (5 AM)-நாகர்கோவில் (1.50 PM)
*நாகர்கோவில் (2.20 PM)-எழும்பூர் (11 PM)
*STOPS: தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை.
*மதுரை (5.15 AM)-பெங்களூரு (1 PM)
*பெங்களூரு (1.30 PM)-மதுரை (9.45 PM)
*STOPS: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், K.R.புரம். #SHARE NOW.

News August 31, 2024

உடலுக்கும் உண்டு கால அட்டவணை

image

*3-5 AM-மூச்சுப் பயிற்சி, தியானம்
*5-7 AM-காலைக் கடன்களை கழிக்கும் நேரம்
*7-9 AM-சாப்பிடும் நேரம்
*9-11 AM-செரிமான நேரம் (சாப்பிடுதல் கூடாது)
*11AM – 1PM-இதய நோயாளிகள் கவனமாக இருக்கும் நேரம்
*1-3 PM-மிதமான சிற்றுண்டி
*3-5 PM-நீர்க்கழிவுகளை வெளியேற்றும் நேரம்
*5-7 PM-தியானம், இறை வழிபாடு
*7-9 PM-இரவு உணவு நேரம் *9-11 PM-அமைதியாக உறங்கலாம் *11PM – 1AM-அவசியம் உறங்கவும் *1-3 AM-கட்டாயம் உறங்கவும்

News August 31, 2024

தமிழ் மொழியின் வரலாறு அறிவோம்..

image

*எட்டுத்தொகை: ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றினை, பரிபாடல், பதிற்றுப்பத்து.
*பத்துப்பாட்டு: திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரை காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை. *ஐஞ்சிறு காப்பியங்கள்: உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூனாமணி, நீலகேசி.

News August 31, 2024

F4 ரேஸ்: உதயநிதிக்கு குவியும் வாழ்த்து

image

சென்னையில் முதல்முறையாக F4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்த உதயநிதியை, கமல் மற்றும் A.R.ரஹ்மான் வாழ்த்தியுள்ளனர். F4 பந்தயத்தால் உற்சாகம், தமிழக விருந்தோம்பல், விளையாட்டுத் திறனை காண ஆவலாக உள்ளதாக கமல் கூறியுள்ளார். இதேபோல சென்னை F4 ரேஸ், இந்தியாவிற்கே உற்சாகம் அளிக்கிறது என ரஹ்மான் தனது X பதிவில் வாழ்த்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டல சொல்லுங்க.

News August 31, 2024

TNஇல் அபாய அளவில் போதை பொருள் புழக்கம்: R.N.ரவி

image

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு, அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாக ஆளுநர் R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், போதை பொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், முற்றிலும் அதனை ஒழித்து வெளியேற்ற வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார். முன்னதாக, சென்னை WCC கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது இதனைப் பேசினார்.

News August 31, 2024

ஆரோக்யமாக வாழ நச்சுனு 4 டிப்ஸ்…

image

*நாள்தோறும் 3 முதல் 5 கேரட் சாப்பிடுவதால், உடலின் நிறம் மாறும், கண் பிரச்னை நீங்கும், முடி வளர்ச்சி பெறும், ஆண்மை அதிகரிக்கும்.
*நாள்தோறும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் மாயமாகிப் போகும்.
*இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, அந்த நீரை நாள்தோறும் பருகி வர (ஓராண்டுக்கு) சர்க்கரை வியாதி உங்களை அண்டாது.
*கமலா ஆரஞ்ச் கிடைக்கும்போதெல்லாம் உண்டால், உதடு புற்றுநோய் (Mouth cancer) வராது

News August 31, 2024

தனபால் தான் என்னோட சாய்ஸ்: திவாகரன்

image

இபிஎஸ்ஸுக்கு பதில், முன்னாள் சபாநாயகர் தனபாலை CM ஆக்கலாம் என சசிகலாவிடம் கூறியதாக, அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். தனது இந்தக் கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்த நிலையில், அதிமுகவில் இருந்த 35 தலித் MLAக்கள் அதனை ஏற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஜெயிலுக்கு சென்ற நிலையில், இபிஎஸ்ஸை அவர் TN முதலமைச்சராக்கினார்.

News August 31, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள் எண்: 38
▶குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
▶பொருள்: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

News August 31, 2024

இந்திய ஆண்களிடம் பிரச்னை: சசிதரூர்

image

இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதாக சசிதரூர் MP தெரிவித்துள்ளார். நாள்தோறும், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், இந்த விஷயத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை என்றால் கண்டிப்பாக ஏதோ பிரச்னை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி நிர்பயா கேஸ் முதல் மே.வங்கம் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வரை அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

News August 31, 2024

சச்சினிடம் ஆசி பெற்ற மனு பாக்கர்

image

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சச்சினின் பயணம் எனக்கும், இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கும் உந்து சக்தி எனக் கூறியுள்ளார். இதேபோல, பெரிய இலக்குகளை நோக்கி கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு மனுவின் வெற்றி உந்து சக்தி என சச்சின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!