news

News August 31, 2024

சிலிண்டர் விலையில் மாற்றம்?

image

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது போல், செப்.1 ஆம் தேதி ( நாளை) சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. தற்போது வணிக சிலிண்டர் ₹1,817, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் ₹818.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 31, 2024

அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி

image

ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். செப்.,8இல் டல்லாஸ் செல்லும் அவர், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி வாஷிங்டனில் இந்தியர்களை சந்தித்து உரையாற்றுகிறார். மேலும், தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்திலும் ராகுல் காந்தி உரையாடுகிறார். 10ஆம் தேதி இரவு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.

News August 31, 2024

சனிக்கிழமை பிறந்தவரா நீங்கள்?

image

சனிக்கிழமை பிறந்த நீங்கள் பிடிவாத குணம் கொண்டவராகவும், கண்டிப்பானவராகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பீர்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அபாரமான மன உறுதி இருப்பதால், ஒரு வேலையை எடுத்தால் அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தாலும், விதியை மாற்றும் முயற்சியை கைவிட மாட்டீர்கள் என்கிறார்கள். உங்க குணங்களோடு ஒத்துப்போகுதா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

News August 31, 2024

கார் பந்தயம்: காவல் அதிகாரி மரணம்

image

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, CM ஸ்டாலின் சுற்றுலா‌ சென்றுள்ள வேளையில்‌, கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரியின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது.

News August 31, 2024

LSG அணிக்கு ரோஹித்தை வரவேற்கிறோம்

image

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மும்பை அணி வீரர் ரோஹித் ஷர்மா ஏலத்திற்கு வந்தால், அவரை வரவேற்க லக்னோ அணி தயாராக உள்ளதாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். மேலும், ரோஹித் ஒரு சிறந்த வீரர், அவரை ஏலத்தில் எடுப்பதில் ஒவ்வொரு அணியும் மகிழ்ச்சி அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ரசிகர்களுக்கு ஆணையிட்ட விஜய்

image

‘G.O.A.T’ திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், தொண்டர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். G.O.A.T படத்திற்கான டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2024

GDP வளர்ச்சி சரிய இதுதான் காரணம்: RBI கவர்னர்

image

இந்தியாவின் GDP வளர்ச்சி வலுவாக இருப்பதாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். முதல் காலாண்டில் GDP வளர்ச்சி 8.2%இல் இருந்து 6.7% சரிந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், தேர்தல் காலத்தில் அரசு செலவினங்கள் குறைக்கப்பட்டதால், மொத்த GDP சற்று சரிந்ததாகக் கூறினார். அதே நேரம் முக்கிய துறைகளின் வளர்ச்சி 7%க்கு மேல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

News August 31, 2024

உடல் எடையை குறைக்க நீர் விரதம் இருங்க…

image

நீர் விரதம் என்பது பழங்கால நடைமுறையாகும். உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் நீர் விரதத்தை பரிந்துரைக்கின்றன. நீர் விரதம் என்பது 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை உணவுக்கு பதிலாக தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் பல பயன்கள் இருந்தாலும், உங்கள் Health Conditionஐ குறிப்பிட்டு மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசிப்பது நல்லது.

News August 31, 2024

ஹரியானா தேர்தல் தேதி மாற்றம்

image

ஹரியானாவில் தேர்தல் தேதியை அக்.1லிருந்து அக்.5க்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. அதைபோல ஜம்மு & காஷ்மீர், ஹரியானா மாநில வாக்கு எண்ணிக்கை நாளும் மாற்றப்பட்டுள்ளது. இரு மாநிலத்திலும் அக்.4 வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்த நிலையில், அது தற்போது அக்.8க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூக மக்களின் திருவிழா நடைபெற உள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

News August 31, 2024

Rupay கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதி நாளை அமல்

image

இந்தியாவில் UPI பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், Rupay Credit Card பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், Rupay கிரெடிட் கார்டுகளுக்கு Visa, Master போன்ற மற்ற கார்டுகளை போல Reward Points, benefits வழங்க அனைத்து வங்கிகளுக்கும் NPCI உத்தரவிட்டுள்ளது. இந்த விதி நாளை முதல் அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!