India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஆகஸ்ட்-31 (ஆவணி 15) ▶வெள்ளிக்கிழமை ▶நல்ல நேரம்: 10:45-11:45 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 12:15-01:15 AM & 09:30-10:30 PM ▶இராகு காலம்: 09:00-10:30AM ▶எமகண்டம்: 01:30-03:00 PM ▶குளிகை: 06:00-07:30 AM ▶திதி: 04.42 AM வரை துவாதசி பின்பு திரியோதசி ▶நட்சத்திரம் 10.14 PM வரை பூசம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: மரணயோகம், சித்தயோகம், ▶சந்திராஷ்டமம்: 10.14PM வரை மூலம்.
தேசிய கல்விக் கொள்கையை (NPE) எதிர்ப்பது, மாணவர்களின் எதிர்கால நலனுக்கு பாதிப்பு என தமிழிசை தெரிவித்துள்ளார். NPEயில், தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்ட அவர், தமிழ் மொழிக்கு PM மோடியை போல வேறு யாரும் மரியாதை தருவதில்லை என்றார். மேலும், தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்தியை, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படாததால் தான், மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில், சாய் சுதர்சன் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த தொடரில், சர்ரே அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், நாட்டிங்கம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடிய அவர், 178 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் 105 ரன்களுக்கு அவர் அவுட்டானார்.
இன்று (ஆகஸ்ட் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அமெரிக்காவில் கலிஃபோர்னியா, டென்னசியில் ஓடும் காரில் இருந்து விலங்குகளை சுடக்கூடாது. ஜப்பானில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் காரில் உட்கார்ந்தால் தண்டனை வழங்கப்படும். அமெரிக்காவின் அலாஸ்காவில் நாயை வாகனத்தின் கூரையில் வைப்பது சட்டவிரோதம். சைப்ரஸில் காரில் சாப்பிட்டால் 85 யூரோக்கள் அபராதம். ரஷ்யாவில் கார் அழுக்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 2,000 ரூபிள் அபராதம் விதிக்கபடும்.
தமிழக காங்கிரஸ் செயலாளராக சூரஜ் ஹெக்டே நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். 25க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு புதிய செயலாளர்களும், பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய பொறுப்பாளர்கள் அந்தெந்த மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் எளிதானது தான். ஆனால் அதனை நாம் Practice செய்து கொண்டே இருக்க வேண்டும். தினமும் ஒவ்வொரு புதிய வார்த்தை அல்லது வாக்கியத்தை படித்து, அதனை நண்பர்களுடன் பேசி வந்தாலே ஆங்கிலம் பேசுவது சுலபமாகிவிடும். சரி, விஷயத்துக்கு வருவோம். “நான் நன்றாக படித்திருக்க வேண்டும்” என்பதை ஆங்கிலத்தில் கூறுங்கள் பார்ப்போம். I Should have studied well எனக் கூற வேண்டும்.
*மேஷம் – சிறப்பான நாளாக அமையும் *ரிஷபம் – மகிழ்ச்சி உண்டாகும் *மிதுனம் – பொறுமையுடன் இருக்க வேண்டும் *கடகம் – சாதனை படைப்பீர் *சிம்மம் – நன்மை உண்டாகும் *கன்னி – பண வரவு இருக்கும் *துலாம் – வீண் செலவு ஏற்படும் *விருச்சிகம் – முயற்சி திருவினையாக்கும் *தனுசு – ஓய்வு தேவை *மகரம் – சிந்தித்து செயல்பட வேண்டும் *கும்பம் – அமைதி உண்டாகும் *மீனம் – புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான காலம் இன்றுடன் முடிவதால் மனு தாக்கல் செய்யப்பட்டதாக அக்கட்சி எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார். முன்னதாக, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற SC அறிவுறுத்தியதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னையில் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands வசதிகளையும் பார்வையிட்டார். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.