news

News August 31, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள் எண்: 38
▶குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
▶பொருள்: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

News August 31, 2024

இந்திய ஆண்களிடம் பிரச்னை: சசிதரூர்

image

இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதாக சசிதரூர் MP தெரிவித்துள்ளார். நாள்தோறும், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், இந்த விஷயத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை என்றால் கண்டிப்பாக ஏதோ பிரச்னை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி நிர்பயா கேஸ் முதல் மே.வங்கம் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வரை அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

News August 31, 2024

சச்சினிடம் ஆசி பெற்ற மனு பாக்கர்

image

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சச்சினின் பயணம் எனக்கும், இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கும் உந்து சக்தி எனக் கூறியுள்ளார். இதேபோல, பெரிய இலக்குகளை நோக்கி கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு மனுவின் வெற்றி உந்து சக்தி என சச்சின் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ஆகஸ்ட் 31: வரலாற்றில் இன்று

image

*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1950 – இந்திய கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு நாள்
*1957 – ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.

News August 31, 2024

பாகிஸ்தானுக்கு இனிமே இருக்கு

image

பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலமெல்லாம் முடிந்துவிட்டது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இனிமேல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்காது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News August 31, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-31 (ஆவணி 15) ▶வெள்ளிக்கிழமை ▶நல்ல நேரம்: 10:45-11:45 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 12:15-01:15 AM & 09:30-10:30 PM ▶இராகு காலம்: 09:00-10:30AM ▶எமகண்டம்: 01:30-03:00 PM ▶குளிகை: 06:00-07:30 AM ▶திதி: 04.42 AM வரை துவாதசி பின்பு திரியோதசி ▶நட்சத்திரம் 10.14 PM வரை பூசம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: மரணயோகம், சித்தயோகம், ▶சந்திராஷ்டமம்: 10.14PM வரை மூலம்.

News August 31, 2024

NPE எதிர்ப்பால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: தமிழிசை

image

தேசிய கல்விக் கொள்கையை (NPE) எதிர்ப்பது, மாணவர்களின் எதிர்கால நலனுக்கு பாதிப்பு என தமிழிசை தெரிவித்துள்ளார். NPEயில், தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்ட அவர், தமிழ் மொழிக்கு PM மோடியை போல வேறு யாரும் மரியாதை தருவதில்லை என்றார். மேலும், தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்தியை, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படாததால் தான், மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

News August 31, 2024

முதல் சதத்தை பதிவு செய்த சாய் சுதர்சன்

image

இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில், சாய் சுதர்சன் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த தொடரில், சர்ரே அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், நாட்டிங்கம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடிய அவர், 178 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் 105 ரன்களுக்கு அவர் அவுட்டானார்.

News August 31, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 31, 2024

Worst-ப்பா.. இப்படியெல்லாமா ரூல்ஸ் இருக்குது..!

image

அமெரிக்காவில் கலிஃபோர்னியா, டென்னசியில் ஓடும் காரில் இருந்து விலங்குகளை சுடக்கூடாது. ஜப்பானில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் காரில் உட்கார்ந்தால் தண்டனை வழங்கப்படும். அமெரிக்காவின் அலாஸ்காவில் நாயை வாகனத்தின் கூரையில் வைப்பது சட்டவிரோதம். சைப்ரஸில் காரில் சாப்பிட்டால் 85 யூரோக்கள் அபராதம். ரஷ்யாவில் கார் அழுக்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 2,000 ரூபிள் அபராதம் விதிக்கபடும்.

error: Content is protected !!