India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 15 ▶குறள்: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ▶பொருள்: மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் பெருந்துயரத்திற்கு ஆளாவர்.
அனைத்து சமூக மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்த நடைமுறைக்கு வந்தால், சமூகத்தில் அமைதி நிலவும்; முஸ்லீம்களுக்கு நன்மை கிடைக்கும் எனக் கூறிய அவர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கம் போல இந்த விஷயத்திலும் பொதுமக்களை திசை திருப்ப, நாடகத்தை அரங்கேற்றக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் அடிக்கடி முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி நேரடியாக மோதுகின்றன. அந்த வகையில், முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துவரும் சிக்கந்தர் படத்தோடு, விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரது படங்களையும் 2025 மார்ச் மாதத்தில் (28 & 30 ஆகிய தேதிகளில்) வெளியிட இரு படக்குழுக்களும் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் முக்கிய ஆடை ஏற்றுமதியாளராக (மாதம் $3.8 பில்லியன்) அந்நாடு உள்ளது தெரிந்ததே. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள களோபரத்தல் அங்குள்ள பன்னாட்டு ஜவுளி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை INDIA கூட்டணி வேடிக்கை பார்ப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டம் நடந்துவருவதாகக் கூறிய அவர், பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு, வங்கதேச இந்துக்களுக்காக குரல் கொடுக்க மனம் வரவில்லை என விமர்சித்துள்ளார்.
விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். உடல் எடையை காரணம்காட்டி பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று (ஆக.,8) நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அரையிறுதியில் வென்ற அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
*வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை INDIA கூட்டணி வேடிக்கை பார்க்கிறது – வானதி
*தமிழக சாலை திட்டங்களுக்கு 2024-25ஆம் நிதியாண்டில் ₹5,000 கோடி ஒதுக்கீடு – நிதின் கட்கரி *. **வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்கவுள்ளார். *SL-க்கு எதிரான 3ஆவது ODI போட்டியில் IND அணி தோல்வியடைந்தது. *ஆசியா இண்டெக்ஸ் ‘சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30’ என்ற புதிய குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த மோசமான சாதனையை, 27 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது. இதற்குமுன், 1997ஆம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அதற்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற நிலையில், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.