news

News August 29, 2024

BE படிப்பு: 70,403 இடங்கள் காலி!

image

BE மாணவர்கள் சேர்க்கைக்காக 3ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. ஆக.23இல் தொடங்கிய கலந்தாய்வில், 51,920 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 1.99 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், 70,403 BE இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப செப்.6-8 வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு செப்.4ம் தேதிக்குள் <>இந்த<<>> இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News August 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-29 (ஆவணி 13) ▶வியாழக்கிழமை ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 – 01:15 AM & 06:30 – 07:30 PM ▶இராகு காலம்: 01:30 – 03:00PM ▶எமகண்டம்: 06:00 – 07:30 AM ▶குளிகை: 09:00 – 10:30 AM ▶திதி: 04.59 AM வரை தசமி பின்பு ஏகாதசி ▶நட்சத்திரம் 08.38 PM வரை திருவாதிரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம், மரணயோகம், அமிர்தயோகம் ▶சந்திராஷ்டமம்: 08.38 PM வரை அனுஷம்.

News August 29, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 29, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 28, 2024

ஜெய் ஷாவை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்

image

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை கிண்டல் செய்யும் விதமாக, மிகப் பெரிய லெஜண்டிற்கு அனைவரும் கைத்தட்டல் கொடுப்போம் என பிரகாஷ் ராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். “அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர், பீல்டர், இந்தியா உருவாக்கிய சிறந்த ஆல்ரவுண்டர். அவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்” என கிண்டல் செய்துள்ளார்.

News August 28, 2024

ஆங்கிலம் அறிவோம்: Hotel Vs Motel

image

Hotel பொதுவாக நகரங்கள், சுற்றுலாத் தலங்கள், வணிக மையங்களின் நடுவில் அமைந்திருக்கும். ஆடம்பர அனுபவத்தை வழங்கும் நோக்கில், ஹோட்டல்கள் கட்டப்பட்டிருக்கும். இதனால் இவற்றின் கட்டணம் அதிகமாக இருக்கும். அதே நேரம், நெடுஞ்சாலை ஓரங்களில் Motel கட்டப்படும். லாட்ஜ் என அழைக்கப்படும் மோட்டல்கள், குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி மற்றும் பார்க்கிங் வசதியை வழங்கும். தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க.<<-se>>#English<<>>

News August 28, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (29.08.2024)

image

*மேஷம் – மகிழ்ச்சியான நாளாக அமையும் *ரிஷபம் – பணம் வரவு கிடைக்கும் *மிதுனம் – ஆர்வமுடன் செயல்படுவீர் *கடகம் – அமைதியான நாளாக அமையும் *சிம்மம் – வீண் செலவு ஏற்படும் *கன்னி – எதிர்பாராத அன்பு கிடைக்கும் *துலாம் – உறுதியுடன் செயல்படுவீர் *விருச்சிகம் – உதவி கிடைக்கும் *தனுசு – வெற்றி உண்டாகும் *மகரம் – பதற்றமான நாளாக இருக்கும் *கும்பம் – வியாபாரத்தில் லாபம் உண்டாகும் *மீனம் – கவனமாக இருக்க வேண்டும்.

News August 28, 2024

விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

image

விநாயகர் சதுர்த்தி செப்.7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிலைகள் நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். நிறுவப்படும் சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிக்க வேண்டும்.

News August 28, 2024

இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

பாரா ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் இன்று இரவு 11: 30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் 140 கோடி இந்தியர்கள் சார்பாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் நாட்டின் உத்வேகத்திற்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக்காக வேரூன்றி இருக்கிறார்கள் என புகழ்ந்துள்ளார்.

News August 28, 2024

119 ஆண்டுகால வரலாற்றை மாற்றிய சதீஷ்குமார்

image

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். செப்.1ஆம் தேதி முதல்வர் அவர் தலைவராக பெறுப்பேற்கவுள்ளார். 1986 ஆம் ஆண்டு ரயில்வே பணியில் இணைந்த இவர், 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!