news

News August 28, 2024

செந்தில் பாலாஜிக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? ஷாநவாஸ்

image

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படாமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். PMLA வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஜாமின் என்பது விதி விலக்காகவும், சிறை என்பது விதியாகவும் இருப்பது ஏன்? என வினவியுள்ளார். இன்று ஜாமின் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என SC கூறியுள்ளது.

News August 28, 2024

டப்பிங் பணியை தொடங்கிய மஞ்சு வாரியர்

image

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படம் அக்.10ல் வெளியாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ள போட்டோக்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

News August 28, 2024

எதிர் நீச்சல் அடி… வென்று ஏற்றுக் கொடி…

image

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகம் முழுவதும் அறியப்படும் அறிவியல் விஞ்ஞானி. ஆனால், அவரது குழந்தை பருவம் தோல்விகளால் நிறைந்து இருந்தது உங்களுக்கு தெரியுமா? ஆம், 9 வயது வரை அவரால் சரளமாக பேசக்கூட முடியாது. மந்த புத்தியுள்ள மாணவனாக காணப்பட்டதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுபோன்ற பல்வேறு அவமானங்களுக்கு 1921இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றதன் மூலம் சமூகத்திற்கு பதிலடி கொடுத்தார்.

News August 28, 2024

ஆக.31இல் ரேஷன் பொருட்கள் பெறலாம்

image

ஆக.31ஆம் தேதி நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தில் இறுதிப்பணி நாளில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதத்திற்கான பொருட்களை பலர் பெறவில்லை என்பதால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் தடையின்றி பொருட்கள் கிடைக்கும் நோக்கில் ஆக.31இல் ரேஷன் பொருட்களைப் பெறலாம் எனக் கூறியுள்ளது.

News August 28, 2024

பாஜகவுக்காக முருகன் மாநாடு நடத்தியது DMK

image

பாஜகவை சாந்தப்படுத்த முருகன் மாநாட்டை DMK நடத்தியுள்ளதாக ADMK விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ADMK EX மினிஸ்டர் ஜெயக்குமார், மதங்களை மதிக்க தெரியாத DMK, முருகன் மாநாடு நடத்தியது வேடிக்கை என்று கூறினார். பாஜகவை தாஜா செய்தால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என வால் பிடிக்கும் வேலையை DMK தொடங்கி உள்ளது. பாஜகவுக்கு சொம்பு தூக்குகிற கட்சியாக மாறிவிட்டது என்றும் அவர் விமர்சித்தார்.

News August 28, 2024

100 நாள்தான்! ICONIC box office experience காத்திருக்கு

image

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா’ வெற்றியை தொடர்ந்து, அதன் 2ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்னும் 100 நாள்களில் ICONIC box office experienceஐ உணர தயாராக இருக்கும்படி பதிவிட்டு, அல்லு அர்ஜூனின் மாஸான போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. யாரெல்லாம் ‘புஷ்பா 2’ படத்துக்காக வெயிட்டிங். கமெண்ட்ல சொல்லுங்க.

News August 28, 2024

LSG அணியின் ஆலோசகரானார் ஜாகீர் கான்

image

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். IPL தொடரில் MI, DC மற்றும் RCB அணிகளுக்காக விளையாடிய அவர் 2017ல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் மும்பை அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர், தற்போது LSG அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக LSG ஆலோசகராக கம்பீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 28, 2024

பங்குச்சந்தை அறிவோம்: Nifty Vs Sensex

image

மார்க்கெட்டில் 4, 5 காய்கறிகளை ஒன்றாக பாக்கெட் போட்டு விற்பார்கள். அதுபோல, NSE சந்தையில் சிறப்பான 50 நிறுவனங்களின் பங்குகளை கொண்ட தொகுப்பு Nifty என அழைக்கப்படுகிறது. BSE சந்தையில் சிறப்பான 30 நிறுவனங்களின் பங்குகளை கொண்ட தொகுப்பு Sensex ஆகும். இவற்றை கொண்டு சந்தையின் போக்கை நம்மால் அறிந்து கொள்ள முடியும். Share market குறித்து அறிய விரும்பும் கேள்விகளை கமெண்ட்ல பதிவிடுங்கள். <<-se>>#Sharemarket<<>>

News August 28, 2024

மாற்றம் ஒன்றே மாறாதது..!

image

“அரசியல் சீர்கெட்டுவிட்டது. சமுதாயம் அறமற்று செயல்படுகிறது” என்றெல்லாம் சிலர் புலம்புகின்றனர். ஆனால், இதை மாற்ற நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்? என பதிலளிப்பார்கள். இவர்களுக்கு மாற்றத்தின் மீதான ஏக்கம் இருக்கிறது. அதே நேரம், அந்த மாற்றத்தை தன்னில் இருந்து தொடங்குவதில் தயக்கமும் உண்டு. எந்த மாற்றமாக இருந்தாலும் சரி, அதை நம்மில் இருந்து தொடங்குவோம்.

News August 28, 2024

சிவாஜி சிலை உடைந்ததற்கு இதுதான் காரணமா?

image

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை, ஓராண்டுக்குள் உடைந்து விழுந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததே சிவாஜி சிலை உடைந்ததற்கு காரணம் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதனை விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காற்றால் சிலை உடைந்துவிட்டது எனக் கூற வெட்கமாக இல்லையா?” என வினவியுள்ளார்.

error: Content is protected !!