India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Paytm நிறுவனம் (OCL) அதன் பேமெண்ட் பிரிவான Paytm Payment Services Limited (PPSL)இல் முதலீடு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் பேமெண்ட் அக்ரிகேட்டர் (PA) உரிமம் கோரி ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க உள்ளது. முன்னதாக, விதிகளை மீறியதாக Paytm Payment வங்கி சேவையை பிப்ரவரி மாதம் RBI முடக்கியது. அதை தொடர்ந்து அதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
புதன்கிழமை பிறந்தவர்கள் புத்திசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் செயல்படுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இலக்கை அடைவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். Multitasking திறன் கொண்டவராகவும், வெற்றி, தோல்விகளை கண்டு கொள்ளாமல், இலக்கை நோக்கி பயணிப்பவராகவும் இருப்பார்கள். குடும்பத்தினருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக் கூறுகின்றனர். நீங்க எந்த கிழமை பிறந்தவர். கமெண்ட்ல சொல்லுங்க.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிய “நந்தன்” திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில் கோலி 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தில் உள்ளார். ரோஹித் ஷர்மா 6 மற்றும் ஜெய்ஸ்வால் 7ஆவது இடத்தில் உள்ளனர். இங்கி., வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசி., கேன் வில்லியம்சன் 2 மற்றும் டேரில் மிட்செல் 3ஆவது இடங்களில் உள்ளனர். 3ஆவது இடத்தில் இதுவரை இருந்து வந்த பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், தற்போது 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
TN அரசு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து மகளிருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஆக.,29,30இல் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். கல்வித் தகுதி: +2 தேர்ச்சி, ITI பயின்ற பெண்கள் ( புதியவர்கள்). வயது : 18-21 வரை. பயிற்சி காலம்: 12 மாதம். உதவித்தொகை மாதம் ₹12,000. உணவு, போக்குவரத்து, தங்குமிடம் இலவசம்.
சமூக வலைதளங்களில் பிறரது புகைப்படங்களை ஆபாசமாகவும், கொச்சையாகவும் சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிநபரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சித்தரித்து வெளியிடுவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களில் தனியுரிமையை மதிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இளம் தலைமுறையினரிடம் நடைப்பயிற்சி குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகளவில் பைக் பயன்படுத்துவதால், சர்க்கரை நோய், High BP, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தாலே, இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும் எனக் கூறுகின்றனர். Share it.
சமீபத்திய நிகழ்வுகளையும், பொது அறிவு வினாக்களையும் ‘கேள்வி?பதில்’ வகையில் புகைப்படங்களாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் Swipe செய்து படிக்க முடியும். இதை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். தொடர்ந்து இதே போல பல பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Way2News செயலியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
‘கூலி’ படத்தில் தயாள் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஷோபின் ஷாஹிர் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் அறிமுகம் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரஞ்சு மொழி பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பிரான்ஸ் தூதரகத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்கட்டமாக 9 மற்றும் 10 வகுப்பை சேர்ந்த 4 பேட்ஜ் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் சென்னை முழுவதிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.