news

News August 28, 2024

10 நாள்களில் தூக்குத் தண்டனை

image

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சட்டப்பேரவையை கூட்டி இதற்கான மசோதா நிறைவேற்றம் செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.

News August 28, 2024

Business Idea: இதை ட்ரை பண்ணி பாருங்க…

image

கொரோனா பேரிடருக்கு பிறகு மக்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக தரவுகள் கூறுகின்றன. அந்த வகையில், ஆரோக்கியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்கலாம். உதாரணமாக எண்ணெய் ஆட்டி விற்கும் தொழிலுக்கு நல்ல டிமாண்ட் உண்டு. 10க்கு 10 அறையில் கூட சுமார் ₹20,000 – ₹1,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கி எண்ணெய் ஆட்டி, லிட்டருக்கு ₹50 லாபம் வைத்து விற்கலாம். Share it. <<-se>>#Business<<>>

News August 28, 2024

3 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடால், தமிழகத்தில் இன்று முதல் 3ம் தேதி வரை 7 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும், தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது.

News August 28, 2024

இங்கு 11 மணி நேரம்தான்

image

உலகில் அனைத்து நாடுகளும் 12 மணி நேர கடிகாரத்தை பின்பற்றுகின்றன. ஆனால் ஒரு நாட்டிலுள்ள நகரம் மட்டும் 500 ஆண்டுகளுக்கும் மேலாக 11 மணி நேரத்தை பின்பற்றுகிறது. அது எந்த நகரம் என பார்க்கலாம். சுவிஸ்ஸின் சோலோதர்னே அந்த நகரமாகும். இதுதவிர அந்நகரில் 11 தேவாலயங்கள், 11 அருங்காட்சியகம், 11 கோபுரம், 11 நீருற்று என அனைத்தும் 11ஆக உள்ளன. இதற்கு நியூமராலஜி மீதான நம்பிக்கையும் ஒரு காரணமாகும்.

News August 28, 2024

JOBS: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் உள்நாட்டு நீர் போக்குவரத்துத் துறையில் (IWAI) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அசிஸ்டென்ட் டைரக்டர், அசிஸ்டென்ட் ஹைட்ரோகிராபிக் சர்வேயர், லைசென்ஸ் என்ஜின் டிரைவர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 11 பதவிகளில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் www.iwai.nic.in தளத்தில் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 28, 2024

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்

image

‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என மத்திய அரசு கூறுகிறது. மும்மொழிக் கொள்கையை நாங்கள் எப்படி ஏற்போம்? தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைத்து, தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள்” என எச்சரித்தார்.

News August 28, 2024

வாழை படக் கதையை உரிமை கோரும் எழுத்தாளர்

image

மாரி செல்வராஜின் “வாழை” கதை தனது கதை என்று எழுத்தாளர் சோ. தர்மன் உரிமை கோரியுள்ளார். திருவைகுண்டத்தில் வாழைத் தார்களை சுமந்த சிறுவர்களை பார்த்து “வாழையடி” என்ற சிறுகதையை எழுதியதாகவும், அந்தக் கதையே வாழை என்றும் அவர் கூறியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த தர்மன், “சூல்” என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். அவரது கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News August 28, 2024

NO.1 பாலைவனம் இதுதான்!

image

உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது தெரியுமா? அது அண்டார்டிக் பாலைவனம்தான். அதன் பரப்பளவு 55 லட்சம் சதுர மைல்கள். மிகப்பெரிய வறண்ட பாலைவனம் சஹாரா (வட ஆப்பிரிக்கா). பசுமையாக காணப்பட்ட இப்பகுதி சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் தார். இது இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே இயற்கையான எல்லை கோட்டை உருவாக்குகிறது. தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க.

News August 28, 2024

Current Affairs: கேள்விகளுக்கு பதில்

image

இன்று காலை 10.30 மணிக்கு <<13957737>>Current Affairs<<>>இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சர்தார் உஜ்ஜல் சிங் 4. பலாப்பழம், பனை மரம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News August 28, 2024

“4”ம் எண்ணை நம்பும் விஜய்

image

விஜய் தனது கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22இல் அறிமுகம் செய்தார். அந்த விழாவுக்கு 1111 எண் காரில் வந்தார். தவெக மாநாடு செப். 22இல் நடைபெறவுள்ளது. இந்த 3 எண்களையும் தனித்தனியே கூட்டினால் 4 வரும். விஜய் பிறந்த தேதி ஜூன் 22. இதை கூட்டினால் வருவது 4 என்பதால், நியூமராலஜிபடி அனைத்து நிகழ்வுகளிலும் 4 வரும்படி விஜய் பார்த்து காெள்வதாகக் கூறப்படுகிறது. உங்களின் ராசி எண் எது? அதை கீழே பதிவிடுங்க.

error: Content is protected !!