news

News September 2, 2024

உதவி செவிலியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பம்

image

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்க உள்ளது. இதற்கு அந்த மருத்துவமனையின் அலுவலகத்தில் செப்.9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்.11 கடைசி தேதி ஆகும்.

News September 2, 2024

‘எமர்ஜென்சி’ படத்திற்கு ரெட் சிக்னல்

image

கங்கனாவின் <<13948551>>’எமர்ஜென்சி’<<>> திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக கூறி, இப்படத்தின் ட்ரெய்லருக்கு பஞ்சாபில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே, சென்சார் போர்டில் இருந்தும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. மேலும் சில காட்சிகளை கட் செய்ய கோருவதாக கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி செப். 6ஆம் தேதி இப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 2, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

இலங்கை: அதிபா் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. ஏமன்: செங்கடலில் பயணித்த க்ரோட்டன் கப்பல் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரஷ்யா: வச்கஜெட்ஸ் எரிமலை அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்து, 22 பேர் சடலங்களாக மீட்பு. பிலிப்பைன்ஸ்: மணிலாவில் 3 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News September 2, 2024

விஜய் கட்சியுடன் கூட்டணியா? அதிமுக பதில்

image

விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தற்போது தெரிவிக்க முடியாது என அதிமுக மூத்தத் தலைவர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி, காலம் கனிந்ததும் பதில் கிடைக்கும் என்றார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 2 கட்சிகளும் கூட்டணி வைக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

News September 2, 2024

பல ஆச்சரியங்கள் நிறைந்த உலகின் குட்டி நாடு

image

இத்தாலிக்குள் உள்ள வாடிகன் நகரம், 118 ஏக்கர் மட்டுமே உலகின் குட்டி நாடாகும். 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது. இங்கு மருத்துவமனைகளோ, சிறைகளோ கிடையாது. கடந்த 95 ஆண்டுகளாக இங்கு ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. கர்ப்பிணிகள் இத்தாலிக்கு அல்லது சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். ரோமன் கத்தோலிக்க மதத்தலைவர்கள் இங்கு வாழ்கின்றனர். இங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை.

News September 2, 2024

மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 2 பேர் பலி

image

மணிப்பூரில் இரு சமூக மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு வெடித்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. 4 மாதங்கள் அமைதியாக இருந்த மணிப்பூரில், நேற்று திடீரென மோதல் வெடித்தது. இதில் கெளட்ரக் கிராமத்தில் ட்ரோன் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாகினர். இதனால் மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

News September 2, 2024

மேலும் ஒரு தமிழ் நடிகை பாலியல் புகார்

image

நடிகை ஷர்மிளா, தன்னை இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 1997இல் அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற மலையாள படத்தில் நடித்தபோது, ஓட்டல் அறையில் தங்கியிருந்த தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், ஆனால் தப்பி விட்டதாகவும், பெண் உதவியாளர் சிக்கியதாகவும் கூறியுள்ளார். கிழக்கே வரும் பாட்டு உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.

News September 2, 2024

நோய்களை தீர்க்கும் சந்திரகாந்த கணபதி

image

முழுமுதற்கடவுள் விநாயகர் அதிசய ரூபனாய் அருள்பாலிக்கும் திருத்தலம் கேரளபுரம் மகாதேவர் கோயிலாகும். 800 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் உள்ள சந்திரகாந்த கணபதி, திருவிதாங்கூர் மன்னர் கேரளவர்மா தம்பிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆடி மாதத்தில் கறுப்பாகவும், தை மாதத்தில் வெள்ளையாகவும் நிறமாறும் கணநாதருக்கு 108 தேங்காய் உடைத்து, மோதகம் படைத்து வணங்கினால், தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

News September 2, 2024

ஃபார்முலா 4 கார் ரேஸால் என்ன பயன்?

image

சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டிய விஷயம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கார் ரேஸ் மூலம் சென்னை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் இதுபோல பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டால், சர்வதேச சுற்றுலாவும் Motor Sports தொடர்பான முதலீடுகளும் அதிகரிக்கும் என்கிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க?

News September 2, 2024

வீட்டுக்கடன் நிதி நிறுவனம்: ரிலையன்ஸ் திட்டம்

image

வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை ரிலையன்ஸ் தொடங்க திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் இதுபற்றி தீர்மானிக்க பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் இதை மனதில் வைத்தே ஜியோ பைனான்சியல் ஆப் தொடங்கப்பட்டதாகவும் தெரிகிறது. வீட்டுக்கடன் துறையில் ரிலையன்ஸ் வந்தால், SBI, HDFC, ICICI வங்கிகளுக்கு அந்த நிறுவனம் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!