news

News August 8, 2024

‘வேட்டையன்’ பட போஸ்டர் வைரல்

image

ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில், ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபகத் பிறந்தநாளில் படக்குழு சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

News August 8, 2024

வினேஷ் போகத்தை எம்.பி ஆக்க திட்டம்

image

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை ராஜ்யசபா MP ஆக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வினேஷ் தகுதி நீக்கத்திற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்று விவாதிக்குமாறு மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி தராததால், வெளிநடப்பு செய்து பேசிய காங். உறுப்பினர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானாவில் இருந்து வினேஷ் போகத்தை மாநிலங்களவைக்கு அனுப்புவோம் என்றார்.

News August 8, 2024

மறுத்த செந்தில் பாலாஜி.. கிடுக்கிப்பிடி போட்ட நீதிபதி

image

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் நீதிபதி அல்லி, ஆங்கிலம் மற்றும் தமிழில் குற்றச்சாட்டுகளை வாசித்தார். அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆனால், லஞ்சம் பெற்றதற்கு ஆதாரமாக பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை பதிவு செய்த நீதிபதி, அவரின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார் .

News August 8, 2024

செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக இருக்கையில் அமர வைக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை ஆக.16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News August 8, 2024

கார் லோனுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி தெரியுமா?

image

புதிய கார் வாங்க வழங்கும் லோனுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி குறித்து தெரிந்து கொள்ளலாம். *SBI: 7.95% – 8.70% * Indian Bank: 8.20% – 8.55% * Canara: 7.30% – 9.90% * Bank of India: 7.35% – 7.95% * UCO: 7.70% – 9.30% *ICICI : 8.82% – 12.75% *HDFC: 8.80% – 10.00% * *Punjab National: 9.40% – 9.90% *Central Bank of India: 7.25% – 7.50% *IDBI: 8.40% – 9.00% *Axis: 8.50% – 11.25%

News August 8, 2024

பெட்ரோல் பங்கில் நமக்கான 6 உரிமைகள்.. அட வேற லெவல்

image

பெட்ரோல் பங்கில் மக்களுக்கான 6 உரிமைகள் இருக்கின்றன. 1. பெட்ரோலின் தரத்தை உறுதி செய்ய Filter Paper Test-ஐ அங்கேயே செய்து கொள்ளலாம். 2. அனைத்து பெட்ரோல் பங்கிலும் கழிப்பறைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதை பயன்படுத்த அங்கு பெட்ரோல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 3. இலவசமாக காற்று நிரப்பிக் கொள்ளலாம். 4. சுத்தமான குடிநீர். 5. இலவச தொலைபேசி வசதி. 6. முதலுதவி உபகரணங்கள் வசதி.

News August 8, 2024

இலங்கை தமிழர் பகுதிகளில் குவிக்கப்படும் சீன ராணுவம்?

image

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று பேசினார். அவர் பேசிய போது, “சீன ராணுவத்தை தமிழர் பகுதிகளில் குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. இது உண்மை தானா? ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் நாங்கள் அனுபவிக்கும் துயரம் போதாதா? தமிழர் வரலாற்றை சிதைக்கவே சீன ராணுவம் குவிக்கப்படுகிறது” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

News August 8, 2024

எள் விதை சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா?

image

எள் விதைகளில் புரதங்கள், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வறுத்த எள் விதைகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உடை எடை அதிகரிக்க அதை உணவில் சேர்த்து கொள்ளலாம். எள் விதைகளை பேஸ்ட்டாக அரைத்து பிரட் போன்றவற்றிற்கு பட்டராக பயன்படுத்தலாம். சமையலுக்கு எள் எண்ணெய் பயன்படுத்துவதும் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News August 8, 2024

வினேஷ் போகத் விவகாரத்தில் முறையான விசாரணை: மமக

image

வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். வினேஷ் போகத் பழி வாங்கப்பட்டிருக்கிறார், என்று மக்கள் பேசுவதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை தேவை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அதிக உடல் எடை காரணமாக வினேஷ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

News August 8, 2024

மெட்ரோ திட்டத்திற்கு நிதி கிடையாது?

image

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்விக்கு பதிலளித்த நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இத்திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுவதால் மாநில அரசே செலவு செய்வதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை என முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.

error: Content is protected !!