news

News April 15, 2025

பிரதமர் டீ விற்றிருக்க மாட்டார்: ஓவைசி

image

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சுக்கு AIMIM எம்பி அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். வக்ஃப் சொத்துக்களை நேர்மையாகப் பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிளுக்கு பஞ்சர் போட்டு வாழும் நிலை வந்திருக்காது என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஓவைசி, RSS தேச நலன்களுக்காகப் பாடுபட்டிருந்தால், பிரதமர் சிறுவயதில் டீ விற்றிருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.

News April 15, 2025

மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கை செக் பண்ணுங்க

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 20-வது தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ₹10,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்க்க விரைவில் விரிவாக்க அறிவிப்பு வெளியாகவுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு ₹1000 வருகிறதா?

News April 15, 2025

TN-ல் இருந்து ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலை பராமரித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மிரட்டல் மெயில் வந்துள்ளது. இதனால் ராமர் கோயிலின் பாதுகாப்பை அதிகரித்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் மிரட்டல் மெயிலை அனுப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 15, 2025

பருவமழை குறைவாக பெய்யும்: IMD

image

தமிழகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்யும் என்று IMD அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமாக இருக்கிறது. அதில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பான 87 செ.மீட்டரை விட அதிகம் பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் குறைவாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

வங்கதேசத்துடன் மோதும் இந்திய.. வந்தாச்சு அட்டவணை

image

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 3 ODI மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய – வங்கதேசம் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 17-ல் இருந்து 23 வரை ODI-யும், 26-ல் இருந்து 31-ம் தேதி வரை T 20 போட்டிகளும் நடைபெறுகிறது. இதனிடையே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்துடனான தொடரை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

News April 15, 2025

சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு

image

திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி விழா அடுத்தாண்டு மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கவுள்ளார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி கடந்த மாதம் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. ஆனால், திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்க முறையினை கடைபிடிக்கிறது.

News April 15, 2025

அமைச்சரவையை கூட்டுகிறார் ஸ்டாலின்

image

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது, புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் கொடுப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

News April 15, 2025

டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

image

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News April 15, 2025

கம்பேக் கொடுப்பாரா சிபிராஜ்?

image

சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18-ம் தேதி வெளியாகிறது. 3 வருடங்களுக்கு பிறகு அவரது படம் ரிலீசாகிறது. இப்படம் நன்றாக அமைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என அவர் தீவிரமாக நம்பி வருகிறார். அவரது 22 வருட சினிமா கெரியரில் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய 2 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. கடைசியாக அவரது ‘வட்டம்’ படம், 2022-ல் OTT-யில் ரிலீசானது.

News April 15, 2025

உதயநிதிக்கும் ஆதரித்து பேசுவேன்: துரைமுருகன்

image

மாநில சுயாட்சி தொடர்பாக நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை ஆதரித்து பேசுவேன் என்று துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். இன்று அறிமுகம் செய்யப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் மீது பேசிய அவர், 1974ஆம் ஆண்டு கலைஞர் தீர்மானம் கொண்டு வந்தபோதும் பேசினேன், இன்றும் பேசுகிறேன், நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதும் ஆதரித்து பேசுவேன் என்று பெருமைப்பட கூறினார்.

error: Content is protected !!