news

News August 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 27, 2024

ஆங்கிலம் அறிவோம்: Politician Vs Statesman

image

Politician என்பதற்கும் Statesman என்பதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? Politician என்பவரை அரசியல்வாதி என்றும், Statesman என்பவரை அரசியல் மேதை எனவும் கூறலாம். அரசியல்வாதி அடுத்த தேர்தல், தனது கட்சி பற்றியும், அரசியல் மேதை அடுத்த தலைமுறை, தனது நாட்டை பற்றியும் சிந்திப்பார் என்று அமெரிக்கச் சிந்தனையாளர் ஜேம்ஸ் ஃப்ரீமேன் கிளார்க் கூறியுள்ளார். உங்களுக்கு தெரிந்த Statesmanஐ கமெண்டில் பதிவிடுங்கள். <<-se>>#English<<>>

News August 27, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (28.08.2024)

image

*மேஷம் – அனுகூலம் உண்டாகும் *ரிஷபம் – மறதி ஏற்படும் *மிதுனம் – ஆசை நிறைவேறும் *கடகம் – நிம்மதியான நாளாக அமையும் *சிம்மம் – வெற்றி கிடைக்கும் *கன்னி – தோல்வி வரும் *துலாம் – அமைதியான நாளாக இருக்கும் *விருச்சிகம் – சுகம் உண்டாகும் *தனுசு – தொலைதூர பயணம் மேற்கொள்வீர் *மகரம் – உடல்நலம் மேம்படும் *கும்பம் – முயற்சியை விடாதீர் *மீனம் – வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

News August 27, 2024

பல்கலைக்கழகங்களை முடங்காமல் தடுக்கணும்..

image

பல்கலைக்கழகங்கள் முடங்காமல் தடுக்க TN அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பல்கலை.களில் பெருமளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பல்கலை.களின் வீண் செலவுகளை குறைத்து, வருவாயை அதிகரிக்க பொதுப் பல்கலை சட்டத்தை இயற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 27, 2024

ஜெய்ஷாவுக்கு பாண்டியா வாழ்த்து

image

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்து கூறியுள்ளார். அதில், “நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சொல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். பிசிசிஐயைப் போலவே உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசியின் வளர்ச்சிக்கு உதவும்” என தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

News August 27, 2024

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

image

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து, 2 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 100% உறுதியுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால், உடனே சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News August 27, 2024

உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேடா…

image

உலகளவில் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் UAE முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் வாரத்திற்கு சராசரியாக 52 Hours வேலை செய்கிறார்கள். பாகிஸ்தான் (46.6 Hours), இந்தியா (46 H), வங்கதேசம் (45.8 H), எகிப்து (45.5H), சீனா (45H) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நெதர்லாந்தில் குறைந்தபட்சமாக 27.5 H மட்டுமே வேலை செய்கின்றனர். நீங்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News August 27, 2024

ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி பெற்ற NDA

image

ராஜ்ய சபாவில் NDA மீண்டும் பெரும்பான்மை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் NDA-வை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வாகினர். இதன் மூலம் NDA பலம் 112ஆகவும், பாஜகவின் தனிப்பட்ட பலம் 96ஆகவும் உயர்ந்தது. தற்போது ராஜ்ய சபாவில் 237 (8 காலியிடம்) எம்பிக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 119 எம்பிக்கள் தேவை. 6 நாமினேட், 1 சுயேட்சை எம்பி ஆதரவு உள்ளதால் BJP எளிதாக மசோதாவை நிறைவேற்றலாம்.

News August 27, 2024

காலையில் எழுந்ததும் இதை செய்யுங்க…

image

தூங்கி எழுந்ததும் எந்த அளவில் சுறுசுறுப்பாக இருக்கிறோமோ அதை பொறுத்துதான் அன்றைய நாளே சிறப்பாக அமையும். *சூரிய உதயத்திற்கு முன் எழ பழகுங்கள். *காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தலாம். *உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உடற்பயிற்சி, யோகா செய்யலாம். *குளிர்ந்த நீரில் குளித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். *8 மணிக்குள் புரதம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். Share it.

error: Content is protected !!