India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய பாதுகாப்புப் படை (NSG) இயக்குநர் ஜெனரலாக, B.ஸ்ரீநிவாசன் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குநர் ஜெனரல் நளின் பிரபாத், J&K சிறப்பு DGPயாக மாற்றப்பட்டுள்ளார். இதனால் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்ட நிலையில், ஆக.31இல் அவர் பொறுப்பேற்கிறார். செப்18-அக்.1.1 வரை J&Kவில் MLA தேர்தல் நடைபெறுவதால், நளின் அங்கு செல்கிறார் மாநிலங்கள் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை போன்றவை NSGயின் பணி.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள் எண்: 36
▶குறள்: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
▶பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
CSK அணியின் தல தோனி, தளபதி ஜடேஜா ஆகியோர், மைதானத்தில் ஒன்றாக இணைந்தால் அது மாஸாக இருக்கும். இந்த நிலையில், இருவரும் சேர்ந்து விவசாயம் செய்தால் அது எப்படி இருக்கும்? இது தொடர்பான Photo ஒன்றை CSK நிர்வாகம், தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், இருவரும் இணைந்து விவசாயம் செய்வதை நினைத்துப் பாருங்கள் என்ற கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
*1928 – R.பாலசரஸ்வதி – தென்னிந்திய நடிகை, பின்னணி பாடகி.
*1934 – A.P.கோமளா – தென்னிந்திய பின்னணி பாடகி
*1949 – டப்பிங் ஜானகி – தென்னிந்திய நடிகை
*1959 – சுமன் – தென்னிந்திய நடிகர்
*1964 – இளவரசு – தென்னிந்திய நடிகர், ஒளிப்பதிவாளர்
*1965 – டிஸ்கோ சாந்தி – தென்னிந்திய நடிகை
*1982 – பிரசன்னா – தமிழ் சினிமா நடிகர்.
*632-முகம்மது நபி மகள் பாத்திமா நினைவு நாள்.
*1867-சூளாமணி புத்த விகாரத்தை (நாகை) இடிக்க ஆங்கிலேய அரசு ஆணையிட்டது.
*1891-திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்.
*1983-இலங்கை அணியின் Ex வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பிறந்த நாள்.
*1990-ஈராக்கின் புதிய மாகாணமானது குவைத்.
*2020-காங்கிரஸ் மூத்த தலைவர் H.வசந்தகுமார் நினைவு தினம்.
மே.வங்கத்தில், இன்று முதல் செப்.4 வரை தொடர் போராட்டம் என BJP அறிவித்துள்ளது. பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு பொறுப்பேற்று CM மம்தா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம், மாநில மகளிர் ஆணைய வாயில்களை பூட்டும் போராட்டம் இன்று நடக்கிறது. நாளை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, செப்.4இல், ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலைகளில் அமர்ந்து போராட உள்ளதாக <<13831297>>BJP <<>>தெரிவித்துள்ளது.
கடவுள் இருக்காரா? இல்லையா? என பள்ளி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி பேசுபொருளாகியுள்ளது. US ஒக்லஹோமா மாகாணத்திலுள்ள ஹைஸ்கூல் மாணவர்களுக்கு வழங்கிய வீட்டுப்பாடத்தில், கடவுள், சாத்தான் இருப்பது உண்மையா? கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனை விமர்சித்து மாணவரின் தாயார் ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவிட, கேள்விகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
▶ஆகஸ்ட்-28 (ஆவணி 12) ▶புதன்கிழமை ▶நல்ல நேரம்: 09:15 – 10:15AM & 04.45 – 05.45PM ▶கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 06:30 – 07:30PM ▶இராகு காலம்: 12:00 – 01:30PM ▶எமகண்டம்: 07:30AM – 09:00PM ▶குளிகை: 10:30AM – 12:00PM ▶திதி: 06.10 AM வரை நவமி பின்பு தசமி ▶நட்சத்திரம் 08.33 PM வரை மிருகசீரிஷம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம் ▶சந்திராஷ்டமம்: 08.33 PM வரை விசாகம்.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி Ex வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நடத்தப்படும் LLC தொடரின் 3வது சீசன், செப்.11-அக்.5 வரை இந்தியா, கத்தாரில் நடக்கிறது. இதில் இணைந்துள்ள அவர், SOUTHERN SUPER STARS அணி கேப்டனாகியுள்ளார். அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும், DK கடந்த ஜூனில் ஓய்வு அறிவித்தார். கேப்டனாக DK கலக்குவாரா?
விஜய் நடித்துள்ள ‘The G.O.A.T’ படம் 2வது முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக U/A சான்றிதழ், படத்தின் ரன்னிங் டைம் 2.59 மணி நேரம் எனக் கூறப்பட்டது. தற்போது, படத்தின் ரன்னிங் டைம் 3.03 மணி நேரம், 7 காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டதாக தெரிகிறது. ‘The G.O.A.T’ படம் 2 பாகங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.