India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடியுமா, ஒரு தொகுதியில் வெல்ல முடியுமா என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். இபிஎஸ் குறித்து விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி கிடையாது, அவர் 7 நாளே ஆயுள் கொண்ட விட்டில் பூச்சி என்றும் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்தும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை, ஆட்சிக்கு வரலாம் என பாஜக பகல் கனவு காண்பதாகவும் விமர்சித்தார் .
சென்னையில் காலையில் ஜிம், வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பூங்கா, ஜிம்முக்கு அருகில் சூப் தொழிலை தொடங்கலாம். ஒரு நாளைக்கு 3 மணி நேரம் ஒதுக்கி பார்ட் டைம் பிசினசாக பண்ணலாம். முருங்கை, காளான், கொள்ளு, காய்கறி என பல வெரைட்டிகளில் தரமாக வழங்கினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மாதத்திற்கு 2,000 கப்கள் விற்றாலே ₹40,000 வரை வருமானம் ஈட்டலாம்.
நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) செயற்குழு நிர்வாகிகள் 17 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். நடிகைகளின் புகார் குறித்து ஆலோசிக்க இன்று இச்சங்கம் கூடுவதாக இருந்த நிலையில், நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் எரிமலையாய் வெடித்துள்ளன. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, மூத்த நடிகை ரேவதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் “நாங்கள் பேசுகிறோம், அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ரேவதியின் குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா? கமெண்டல சொல்லுங்க.
தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது. அதில், ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் சின்னத்தை அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் தவெக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. யானை சின்னத்தை அகற்ற வலியுறுத்தியும், விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
குரங்கம்மை காய்ச்சலைக் கண்டறிவதற்கான உள்நாட்டு பரிசோதனை கருவியை இந்தியா உருவாக்கியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் உருவாகியுள்ள IMDX RT-PCR பரிசோதனை என்ற கருவிக்கு CDSCO அங்கீகரித்ததுடன், உற்பத்தி செய்ய அனுமதியும் அளித்துள்ளது. 40 நிமிடங்களில் முடிவுகளை அளிக்கும் இக்கருவி மூலம் எம்பாக்ஸ் வைரஸ் கிளேட் 1 & 2 தொற்று பாதிப்புகளைக் கண்டறிய முடியும்.
இன்று காலை 11 மணிக்கு <<13949718>>Current Affairs<<>>இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1.அருணாச்சல பிரதேசம் 2.இந்தியாவின் விண்வெளி சகாப்தம். 3.சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 4.தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
உலகின் முதல் Paralympics போட்டியானது, லண்டனில் 29 ஜூலை 1948 அன்று, Dr.குட்மேன் என்பவரது முன்னெடுப்பில் நடத்தப்பட்டது. ஸ்டோக் மாண்டேவில் கேம்ஸ் என்ற பெயரில் நடைபெற்ற அப்போட்டியில், 2ஆம் உலகப்போரில் பங்கெடுத்து, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 16 ராணுவ வீரர்கள் (வில்வித்தை) பங்கேற்றனர். 1988இல் இதுவே மாற்றுத்திறன் கொண்ட வீரர்களுக்கான ஒலிம்பிக்ஸ் என்ற பொருளில் Para Olympics என பெயர் மாற்றம் கண்டது.
கட்சி அனுமதி பெற்று 3 மாத பயணமாக இன்றிரவு வெளிநாடு செல்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் படிப்பதற்காக லண்டன் செல்வதாகவும், வெளிநாடு சென்றாலும் ஆளுங்கட்சிக்கு எதிரான தனது சண்டை தொடரும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், CM ஸ்டாலின் ஏற்கெனவே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தோல்வியில் முடிந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், அமெரிக்க பயணம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ரகசியம் பேச ஸ்டாலினும், அண்ணாமலையும் வெளிநாட்டுக்கு டூர் செல்வதாக, அதிமுக விமர்சித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால், வெளிநாடுகளில் வைத்து ரகசியம் பேச 2 பேரும் டூர் செல்வதாக விமர்சித்தார். ரஜினி- துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு, ரஜினியை வைத்து துரைமுருகனை ஸ்டாலின் மட்டம்தட்டி விட்டதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.