India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலிவு திட்டங்களை கொடுக்கும் ஜியோவாலேயே அளிக்க முடியாத அதிக வேலிடிட்டி திட்டத்தை BSNL வழங்குகிறது. இதன்படி, ரூ.91 ரீசார்ஜ் செய்தால் 90 நாள் வேலிடிட்டி கிடைக்கும். சிம்மை ஆக்டிவாக வைக்க இத்திட்டம் உதவும். இதில் டேட்டாவோ, டாக் டைமோ கிடையாது. அதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்படி, 1 நிமிட அழைப்புக்கு 15 காசு, 1 எம்பி டேட்டாவுக்கு 1 காசு, 1 எஸ்எம்எஸ்-க்கு 25 காசு வசூலிக்கப்படும்.
வீட்டில் இருந்து E-FIR மூலம் பெண்கள் புகார் அளிக்க வசதி இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறினார். காவல்நிலையம் செல்ல விரும்பாத பெண்கள், வீட்டில் இருந்து புகார் அளிக்கலாம், அதில் யாரும் திருத்தம் செய்ய முடியாது என்றும் உறுதியளித்தார்.
இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பதிவுதான் இது. கேரட், பீட்ரூட் தலா ஒரு கப், மாதுளை பழத்தின் விதைகள், அரை மூரி துருவிய தேங்காய், ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தாலே, ஹீமோகுளோபின் எகிறும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கடந்த 2 மாதத்தில் 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரர் ஆகி இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6,000 கோடி நிதி அளிக்கும் பணியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடி பெண்கள் கோடீஸ்வரர் ஆனதாக கூறினார். தேர்தல் பிரசாரத்தில் மேலும் 3 கோடி பேரை கோடீஸ்வரர் ஆக்குவேன் என வாக்குறுதி அளித்ததாக கூறினார்
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்சி கொடியை நிர்வாகிகள் ஏற்றி வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி எங்கும் கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், உத்தரவை மீறி அனுமதியின்றி கொடியேற்றினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஆக., 28ஆம் தேதி வரை IBPS ஆணையம் நீட்டித்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். வயது வரம்பு: 20-30. கல்வி தகுதி: Any Degree. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ₹180/-. கூடுதல் தகவல்களுக்கு IBPS என்ற இந்த இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
தவெக கொடி அறிமுகப்படுத்தப்பட்டது முதலாகவே, விஜய் அரசியல் குறித்த விவாதம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே, 234 தொகுதிகளிலும் கட்சிக் கொடியை பறக்க விட, தனது தொண்டர்களுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மதுரையில் தவெக கொடிக்கம்பத்தை நட போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சியின் அனுமதியில்லா சான்று இல்லாததால் அனுமதி அளிக்கவில்லை என போலீஸ் விளக்கமளித்துள்ளது.
இன்று 12 மணிக்கு <<13937219>>Current Affairs<<>>ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே.
1. ஆகஸ்ட் 23
2. Rail Force One
3. ஜெட் (மணிக்கு 800 கி.மீ)
4. செவ்வாய் கிரகம்
– இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2news உடன் தொடர்பில் இருங்கள். எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பண்ருட்டி அருகே நடந்த நிகழ்வில் தேமுதிக கொடிக்கம்பம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில், அக்கட்சி நிர்வாகி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 5 நிர்வாகிகள், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முள் நீக்கிய மீன் துண்டுகளை மஞ்சள் போட்டு சுத்தமாக அலசி, நீர் வடிய நன்றாக பிழிந்துகொள்ளவும். அவற்றின் மீது மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த மசாலா விழுதை தடவி, ஊற வைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள அதனை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான மீன் பஜ்ஜி ரெடி. இதனை மல்லி சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
Sorry, no posts matched your criteria.