India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும் .தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை விட்டு 17 ஆண்டுகளில் 1 கோடி பேர் வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்ஸ் கன்சல்டன்ட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நல்ல வேலை தேடி 1 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாகவும், இதில் பிஎம்எல்-என் கட்சி ஆட்சிகாலமான 2015-18இல் அதிகம் பேர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியை, அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல்முறையாக வங்கதேசம் வீழ்த்தியது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் PAK 448/6 டிக்ளர், BAN 565 ரன்களும் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் PAK, 146 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 30 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய BAN எளிதில் வெற்றிபெற்றது. 191 ரன்கள் குவித்த BAN அணியின் முஷ்பிகுர் ரஹீம், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கு என்று புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது என்றும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
இந்திய பங்குச்சந்தையில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் மதிப்பு ₹95,522 கோடி அதிகரித்தது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி அதிகரித்து, ₹20,29,710 கோடியாக உயர்ந்தது. அதேபோல, TCS ₹17,167 கோடியும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ₹15,225 கோடியும், ஏர்டெல் ₹12,268 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ₹11,524 கோடியும் மதிப்பு உயர்ந்தது. இந்த வார சந்தை எப்படி இருக்குமென கணிக்கிறீர்கள்?
‘சட்டம் என் கையில்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை தொடர்ந்து, சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, த்ரில்லர் ஜானரில் சச்சி இயக்கியுள்ளார். கையில் Gun உடன் சதீஷ் அமர்ந்திருக்கும் மிரட்டலான போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காமெடியன்கள் கதாநாயகர்களாக மாறி வரும் தற்போதைய ட்ரெண்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நடப்பு ஆண்டிற்கான கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. செப்.8ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச், சின்னர் அல்காரஸ், அலெக் சாண்டர் சுவரேவ், மெட்வதேவ், ரூப லெவ் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ஜோகோவிச் 25 பட்டத்திற்கு காத்திருக்கிறார்.
விஜய் உடன் கூட்டணி அமையுமா? இல்லையா? என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருப்பதாகவும், அதை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துக் காட்டமாகப் பேசியிருக்கிறார் நடிகை ஊர்வசி. ஹேமா குழு அறிக்கை குறித்து பேசிய அவர், “இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்ற பல நடிகைகள் சினிமாவை நம்பித்தான் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட ஆடவர் மத்தியில் வேலை செய்வதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. நான் பாதித்தவர்கள் பக்கம்தான் நிற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். ராய்கரில் போதைப் பொருள் கட்டுப்பாடு பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், போதைப் பொருள் புழக்கம் இல்லாத நாட்டை உருவாக்க மோடி உறுதிபூண்டு உள்ளதாக குறிப்பிட்டார். போதைப் பொருள் கடத்தல்காரர்கள், இயற்கை போதை பொருளுக்கு பதிலாக சிந்தடிக் போதைப் பொருளுக்கு மாறுவதாகவும் எச்சரித்தார்.
Sorry, no posts matched your criteria.