news

News August 25, 2024

தனுஷ் படத்தில் Cameoவாக பிரியங்கா மோகன்

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” விரைவில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் புது போஸ்டரை வெளியிட்டுள்ள தனுஷ், Cameoவாக நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்திற்கு GVP இசையமைத்துள்ளார்.

News August 25, 2024

அனைத்து தொகுதிகளிலும் போட்டி: பிரசாந்த் கிஷோர்

image

பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளில் ஜன் ஸ்வராஜ் கட்சி போட்டியிடும் என அக்கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2025இல் பிஹாரில் ஆட்சி அமைத்தால், தொழிலாளர்கள் 10 ஆயிரம் சம்பளத்திற்கு பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிஹாரின் தலையெழுத்தை அடுத்த ஆண்டு மாற்றுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

News August 25, 2024

‘கங்குவா’ ரிலீஸ் ஒத்திவைப்பு?

image

‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. அக்., 10இல் ‘கங்குவா’ வெளியாக இருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாவதால், இந்த படத்தை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News August 25, 2024

நேற்று பெரியார்; இன்று முருகனா? : தமிழிசை

image

பெரியார் என்று கூறியவர்கள் இன்று கடவுள் முருகனை அழைக்கிறார்கள் என தமிழிசை, திமுகவை விமர்சித்துள்ளார். ஆன்மிகத்தை பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை பற்றி பேசியவர்கள் தற்போது முருகனுக்கு மாநாடு நடத்துவது, பாஜகவின் வெற்றி எனக் குறிப்பிட்டார். பாஜக முருகனுக்கு வேல் யாத்திரை நடத்திய போது விமர்சித்த திமுக, தற்போது முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 25, 2024

நாளை துளசி இலைகளை பறிக்காதீர்

image

நாளை துளசி இலைகளை பறிக்க வேண்டாம். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஜன்மாஷ்டமி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஏனென்றால் துளசி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. மேலும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் நாளை விரதம் இருந்து, கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

News August 25, 2024

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை

image

பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை., சிண்டிகேட் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயரை பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தும், மோசடியாக ஆசிரியர்களை கணக்கு காட்டிய 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News August 25, 2024

பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும் : யுவன்

image

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் யுவன்சங்கர் ராஜா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஆரம்பத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், என்னை Failure Composer என முத்திரை குத்தினார்கள். அதற்காக நான் அழுதிருக்கிறேன். பின்னர் எனது இசையில் கவனம் செலுத்தி உழைத்ததால், இப்போது உங்கள் முன் நிற்கிறேன். பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும். அதை நாம் கண்டுகொள்ளக் கூடாது” என அவர் கூறினார்.

News August 25, 2024

நீண்டகால நண்பரை கரம்பிடித்தார் எமி ஜாக்சன்

image

நடிகை எமி ஜாக்சன் தனது நீண்டகால நண்பரான நடிகர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணப் புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே எமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜுடன் குழந்தை பெற்றுக் கொண்டார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மனம் ஒத்துப்போகாமல் அவரை பிரிந்தார்.

News August 25, 2024

நாளை அரசு பொதுவிடுமுறை

image

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. பண்டிகையையொட்டி, நாளை பல முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கிருஷ்ணரை வழிபட்டால், கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால், காலையில் இருந்தே கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

News August 25, 2024

திமுக, அதிமுகவை அகற்றவே வந்துள்ளேன்: அண்ணாமலை

image

காமராஜர், எம்ஜிஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டை சிதைத்துவிட்டனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு அதிமுக, திமுக எப்போதும் எதிரிதான் எனக் கூறிய அவர், இபிஎஸ்-க்கு என்னைப் பற்றி பேச எந்தத் தகுதியுமில்லை எனக் கூறினார். 2 திராவிடக் கட்சிகளையும் அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர். தமிழ்நாட்டில் எப்போதும் பாஜகவிற்கும்- திமுகவிற்கும் உறவு இருக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!