news

News August 28, 2024

9 மாவட்டங்களில் 7 மணி வரை மழை கொட்டும்: IMD

image

9 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD கூறியுள்ளது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடும் எனவும் IMD கூறியுள்ளது.

News August 28, 2024

AIRTEL வாடிக்கையாளர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனத்துடன் AIRTEL ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ஆப்பிள் TV மற்றும் ஆப்பிள் MUSIC சேவையை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் AIRTEL SIM, WIFI (AIRTEL XStream) இணைப்பு வைத்துள்ள அனைவரும், ஆப்பிள் TVயில் ஒளிபரப்பாகும் படங்கள், நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

News August 28, 2024

ரஜினி ரசிகர்களுக்கு இன்று 6 PMக்கு விருந்து

image

கூலி படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் விவரங்கள் இன்று 6PMக்கு வெளியிடப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படம் 2025ஆம் ஆண்டு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யாரெல்லாம் நடிப்பாங்க? Guess பண்ணி கமெண்ட்ல சொல்லுங்க.

News August 28, 2024

அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வாசகம்

image

திருவாரூரில் உள்ள அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வார்த்தையை பொறித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது. தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு, 119 KM பரப்பளவு கொண்டது. பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு இதுவாகும்.

News August 28, 2024

தடை மாத்திரைகளை விற்றால் நடவடிக்கை: TDCD

image

மத்திய அரசு தடை செய்த மருந்துகளை விற்றால், கடும் நடவடிக்கை என தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் (TDCD) எச்சரித்துள்ளது. எதிர்விளைவு காரணமாக சளி, இருமல், சத்து மாத்திரை என 156 மருந்துகளை, இந்தியாவில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளை உடனே திருப்பி அனுப்ப, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ள TDCD, தடையை மீறி விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News August 28, 2024

மழை பெய்யும் விதம்.. அதன் தன்மை!

image

*தூறல் – பசும்புல் மட்டும் நனைந்து விரைவில் உலர்ந்துவிடும்.
*சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
*மழை – ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
*பெருமழை – நீர் நிலைகள் நிரம்பி வழியும்.
*அடைமழை – விடாது தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கும் (ஐப்பசி மாதம்).
கனமழை – கண்மாய், கால்வாய்களில் உடைப்பு ஏற்படும் அளவுக்கு பெய்யும் (கார்த்திகை மாதம்)
கோடைமழை – இடி மின்னலுடன் பெய்யும் (மாசி, பங்குனி) SHARE IT.

News August 28, 2024

தமிழகத்திற்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்

image

TNக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, PM மோடி ஆக.31இல் தொடங்கி வைக்கிறார்.
*எழும்பூர் (5 AM) – நாகர்கோவில் (1.50 PM), *நாகர்கோவில் (2.20 PM) – எழும்பூர் (11 PM)
*STOPS: தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை.
*மதுரை (5.15 AM) – பெங்களூரு (1 PM)
*பெங்களூரு (1.30 PM) – மதுரை (9.45 PM)
*STOPS: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், K.R.புரம். #SHARE.

News August 28, 2024

தமிழக கல்வி முறையை அழிக்க முயற்சி: அப்பாவு

image

தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க, மத்திய அரசு (CG) முயல்வதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இந்தியாவிலேயே, கல்வியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் TN என சுட்டிக்காட்டிய அவர், இங்குள்ள சிறந்த கல்விக்கு இடையூறு கொடுக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் TNக்கு, கடந்த 2022 முதல் கல்விக்கான நிதியை CG ஒதுக்கவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

News August 28, 2024

மூட்டு வலியை மூட்டைக்கட்ட.. டிப்ஸ் இதோ

image

*பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி மூட்டுப் பகுதியில் கட்டலாம்.
*மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி, தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை பருகலாம்.
*கொய்யா இலைகளை அரைத்து, மூட்டுப் பகுதியில் பூசலாம்
*சூடான பாலில் 3 ஏலக்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவில் அருந்தலாம்.
*அத்திப்பாலை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமடையலாம். #SHARE IT

News August 28, 2024

T20 WORLD கப்பு நமக்குத்தான்: ஹர்மன்பிரீத்

image

T20 WCஐ இந்திய மகளிர் அணி வெல்லும் என, கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் அவ்வாறு செயல்பட்ட அனுபவம் உள்ளதால் நடப்பாண்டு WCஐ நிச்சயம் வெல்வோம் என உறுதி தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் அக்.3-20 வரை UAEயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் IND அணி வீராங்கனைகள் பட்டியல் நேற்று வெளியானது.

error: Content is protected !!