news

News August 28, 2024

WYNK MUSIC செயலிக்கு குட்பை.. ஏர்டெல் முடிவு

image

WYNK MUSIC செயலி செயல்பாட்டை இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் மூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் MUSIC செயலி சேவை தொடர்பாக ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, WYNK MUSIC செயலியை மூடிவிட்டு, அதில் பணிபுரியும் ஊழியர்களை தனது நிறுவனத்தில் ஏர்டெல் சேர்க்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. 2014இல் WYNK MUSIC செயலியை ஏர்டெல் ஆரம்பித்தது. அதை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.

News August 28, 2024

வாட்ஸ்அப் MSG-ஐ அழிப்பது குற்றமாகாது: சுப்ரீம் கோர்ட்

image

வாட்ஸ்அப் MSG-ஐ அழிப்பது குற்றமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிஆர்எஸ் மூத்த தலைவர் <<13951208>>கவிதா <<>>வழக்கு விசாரணையில், அவர் வாட்ஸ்அப் MSG-ஐ அழித்துவிட்டதாகவும், மொபைல் போனை பார்மட் செய்ததாகவும், இது ஆதாரங்களை அழிக்கும் செயல் என்றும் சிபிஐ வாதிட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், MSG-ஐ அழிப்பது அன்றாடம் நடக்கும் செயலே, இது குற்றமாகாது எனக் கூறினர்.

News August 28, 2024

அவர்களை நம்பவே நம்பாதீங்க.. NSE வார்னிங்

image

பங்குச்சந்தை முதலீட்டிற்கு அதிக லாபம் உண்டு என்று தெரிவித்து அணுகுவோரை நம்ப வேண்டாம் என்று முதலீட்டாளர்களை தேசிய பங்குச்சந்தை (NSE) எச்சரித்துள்ளது. இதுகுறித்து NSE வெளியிட்டுள்ள அறிவிப்பில், பங்குச்சந்தையில் லாபத்திற்கான உத்தரவாதம் என எதுவும் இல்லை, அதுபோல வாக்குறுதி அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சட்டவிரோதம், அவை எக்ஸ்சேஞ்ச் நஷ்ட ஈட்டின்கீழ் வருவதில்லை என NSE கூறியுள்ளது.

News August 28, 2024

17வது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று பாரிஸில் தொடங்குகிறது. இதையொட்டி, இன்றிரவு 11.30 மணிக்கு பாரிஸில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. செப்.8 வரை நடக்கும் போட்டிகளில், 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், இந்தியாவில் இருந்து 32 மகளிர் உள்பட 84 பேரும், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், துளசிமதி, நித்ய ஸ்ரீசிவன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

News August 28, 2024

இந்தியாவில் ரயில்களை கவிழ்க்க IS அமைப்பு சதி

image

இந்தியாவில் ரயில்களை கவிழ்க்கும்படி தீவிரவாதிகளுக்கு IS தீவிரவாதி பர்ஹதுல்லா கோரி உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அக்சர்தாம் கோயிலில் 2002இல் நடந்த தாக்குதல் உள்பட பலத் தாக்குதல் தாெடர்பாக கோரி தேடப்பட்டு வருகிறார். டெலிகிராம் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் ரயில் கவிழ்ப்பில் ஈடுபடவும், இந்து தலைவர்கள், போலீஸ் மீது தாக்குதல் நடத்தவும் ஆணையிட்டுள்ளார்.

News August 28, 2024

NCLT இல் வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

மத்திய அரசின் NATIONAL COMPANY LAW தீர்ப்பாயத்தில் ஜாயிண்ட் REGISTRAR, டெபுடி REGISTRAR, ASSISTANT REGISTRAR ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. டெபுடேஷன் அடிப்படியிலான இந்த வேலைக்கு மாதம் ₹67,700 முதல் ₹2.15 லட்சம் சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்தப்படுவர்.

News August 28, 2024

வங்கி வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். பல்வேறு வங்கிகளில் PROBATIONARY OFFICERS, MANAGEMENT TRAINEES, SPECIALIST OFFICERS பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பு கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அந்த அவகாசம் இன்றுடன் முடிவதால், https://www.ibps.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT

News August 28, 2024

அதிமுக தலைவர்கள் ஊழலை வெளியிடுவோம்: பாஜக

image

அதிமுக தலைவர்கள் ஊழலை வெளியிடப் போவதாக பாஜக தெரிவித்துள்ளது. அண்ணாமலையை விமர்சிக்கும் அதிமுக தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், அதிமுக தலைவர்கள் வழக்குகளை விரைவுப்படுத்த நீதிமன்றத்தை நாடுவோம் எனக் கூறியுள்ளார். இபிஎஸ்ஸை தலைவராக மக்கள் ஏற்கவில்லை, ஆதலால் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

காலராவை தடுக்கும் ‘ஹில்கால்’

image

காலராவை தடுப்பதற்கான ‘ஹில்கால்’ என்ற புதிய மருந்தை, பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாய் வழியாக செலுத்தும் இந்த தடுப்பு மருந்தை, 3 கட்டமாக சோதித்து வெற்றி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ‘ஹில்கால்’ மருந்து உற்பத்திக்கு இந்திய DGCI அனுமதி வழங்கியுள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 10 கோடி டோஸ் காலரா தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

News August 28, 2024

INDIAN BANK-ல் வேலை பார்க்க ஆசையா? APPLY

image

INDIAN BANK-ல் காலியாக இருக்கும் 300 இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள BANK OFFICER பதவிகளை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 2ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரத்தை இந்தியன் BANK இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!