India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தி செப்.7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிலைகள் நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். நிறுவப்படும் சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிக்க வேண்டும்.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் இன்று இரவு 11: 30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் 140 கோடி இந்தியர்கள் சார்பாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் நாட்டின் உத்வேகத்திற்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக்காக வேரூன்றி இருக்கிறார்கள் என புகழ்ந்துள்ளார்.
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். செப்.1ஆம் தேதி முதல்வர் அவர் தலைவராக பெறுப்பேற்கவுள்ளார். 1986 ஆம் ஆண்டு ரயில்வே பணியில் இணைந்த இவர், 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காலையில் மாவுச் சத்து நிறைந்த சோறு, இட்லி, தோசைனு சாப்பிடுவதற்கு பதிலாக, ஆப்பிள், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு தேவையான நல்ல சத்துகள் கிடைக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும் என்பதால், மதியம் நன்றாக பசிக்கவும் செய்யும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், ஒரே வாரத்தில் முகம் பளபளவென ஜொலிக்கும் என Nutritionist கூறுகின்றனர். Share it…
KDM தங்கம் என்பது ஒருவகை உலோக கலவை ஆகும். இதில் 92% தங்கமும், 8% காட்மியமும் கலந்திருக்கும். 916 தங்கத்தை விட தூய்மையான இந்த கலவை, தங்கத்தை பாதிக்காவிட்டாலும், அதை அணிபவர்களுக்கும், தயாரிப்பவர்களுக்கும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைத் தொடந்து KDM தங்க விற்பனைக்கு BIS தடை விதித்தது. தற்போது காட்மியத்திற்கு பதிலாக துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சம்பாய் சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். கட்சியில் இருந்து விலகினாலும் மக்களுக்கான தனது போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக.30இல் அவர் பாஜகவில் இணையவுள்ள நிலையில், தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
<<13962822>>கொளத்தூர்<<>>, பெரவள்ளூர், சிறுவள்ளூர், ஆகிய 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு கொளத்தூர் தாலுகா செயல்படும். 3,78,168 பொதுமக்கள் வசிக்கும் 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது கொளத்தூர் தாலுகா. புதிய தாலுகா உருவாக்கப்பட்டதால், பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாக தாலுகா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து பிரித்து, கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. CM ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. அவரிடம் நடிகர் அஜித் தீண்டாமையை கடைபிடித்ததாக யூடியூபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ‘வேதாளம்’ படப்பிடிப்பில் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் அமர்ந்திருக்கையில், அஜித் போட்டோ எடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை யோகி பாபு தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் தேசிய சின்னங்கள் குறித்து பள்ளியில் படித்திருப்போம். தேசிய விலங்கு – பெங்கால் புலி, தேசிய பறவை – மயில், தேசிய பாடல் – வந்தே மாதரம், தேசிய கீதம் – ஜன கண மன, தேசிய மலர் – தாமரை என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல தேசிய காய்கறி – பூசணிக்காய், தேசிய பழம் – மாம்பழம், தேசிய நீர்வாழ் விலங்கு – கங்கை நதி டால்பின், தேசிய ஊர்வன – ராஜ நாகம். தேசிய பாரம்பரிய விலங்கு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.