India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையில் பாலியல் வழக்கில் சிக்கியவர்(46), லிவ் இன் அக்ரிமென்டை காட்டி ஷாக் கொடுத்துள்ளார். தன்னை ஏமாற்றி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாக இளம்பெண்(29) புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ‘பிரியமானவளே’ பட பாணியில் தங்களுக்குள் அக்ரிமென்ட் இருப்பதாக அவர் காட்டியுள்ளார். எந்த நேரத்திலும் பிரியலாம், அந்த பெண் கர்ப்பமானால் தான் பொறுப்பல்ல என்பது உள்ளிட்ட 7 கண்டிஷன்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
தென் மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதில், கர்நாடகாவில் 26,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு டெங்கு சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 4 பேர் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர்.
முக்கிய அசைன்மென்ட் ஒன்றுக்காக தமிழகத்தில் என்ஐஏவும், போலீஸும் கைக்கோர்த்துள்ளன. கோவை கார் குண்டுவெடிப்புக்கு பிறகு தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் உளவு பார்த்து வருகின்றனர். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்த நிலையில், போலீசாருடன் சில காலம் இணைந்து செயல்பட என்ஐஏ முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் வந்த என்ஐஏ தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி, பல திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.
வசதி, வாய்ப்பு இல்லாத ஏழை மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தோள் கொடுத்து தூக்கிவிட்ட வரலாறு ஏராளம். அந்த வரிசையில் ராமநாதபுரத்தில் பேருந்து வசதி இல்லாததால் தினமும் 5 km நடந்தே பள்ளிக்கு வந்த மாணவன் ஹரிஹரனுக்கு HM அல்போன்ஸ் ராணி தனது சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். தாயுள்ளத்தோடு பணியாற்றும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத்தை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவர்கள் இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனினும், இதுவரை வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் அவர்கள் இருவரின் பெயரும் இடம்பெறவில்லை.
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அடுத்த 4 ஆண்டுகளில் இருமடங்காகும் என PwC நிதி நிறுவனம் கணித்துள்ளது. தற்போது 10 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 2028-29க்குள் 20 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 15%ஆக இருக்கும் சூழலில், UPI போன்ற வசதிகளால் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வரும் 14ம் தேதி இதற்கான முதல்நிலை தேர்வுகள் நடைபெற உள்ளன. 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புருனேவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரும், சுல்தானுமான ஹசனல் போல்க்கியாவை சந்தித்துள்ளார். குயின் எலிசபெத்துக்கு பிறகு, நீண்டகாலம் ஒரு நாட்டை ஆளும் அரசர் இவர் மட்டுமே. இவரது சொத்து ரூ.2.51 லட்சம் கோடி. ஆடம்பர பிரியரான இவரிடம் 600 Rolls Royce கார்கள் உட்பட மொத்தம் 7,000 கார்கள் உள்ளன. 20 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள அரண்மனையில் 3 மனைவிகள், 12 பிள்ளைகளுடன் இவர் வசிக்கிறார்.
மறைந்த தயாரிப்பாளர் <<14016074>>மோகன் நடராஜன்<<>> உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு முதல் ஆளாக சென்று அவர் மரியாதை செலுத்தினார். சூர்யாவின் வேல் திரைப்படத்தை நடராஜன் தயாரித்திருந்தார். அப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. விஜய், அஜித், விக்ரம் படங்களையும் தயாரித்துள்ள அவர், கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில், இன்று காலை காலமானார்.
சிகாகோவில், ஈட்டன் நிறுவனத்திற்கும், TN அரசுக்கும் இடையே ₹200 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் ஈட்டன் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 500 பேருக்கு வேலை கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.