news

News August 29, 2024

எந்தெந்த செயலிகளை தடை செய்யலாம்?

image

இந்தியாவில் பணமோசடி, சூதாட்டம், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ‘டெலிகிராம்’ ஆபாச படம் & மனித கடத்தலை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் காரணமாக அச்செயலியை மத்திய அரசு தடை செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்தெந்த அப்ஸை அரசு தடை செய்யலாம் என இங்கே கருத்திடவும்.

News August 29, 2024

1,539 பேரிடம் தலா ₹1,000 கோடி

image

இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ₹1,000 <<13966801>>கோடிக்கும் <<>>மேல் சொத்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 220 அதிகம். இவர்களின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது. முதல்முறையாக இந்தி நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் நுழைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ₹7,300 கோடி இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரமாக மும்பை, டெல்லி, ஹைதராபாத் திகழ்கின்றன.

News August 29, 2024

உசைன் போல்ட்டை நினைவுப்படுத்திய சிறுவன்

image

இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 10.30 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டென்னிஸ் 10.51 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அதை 0.21 வினாடிகள் வித்தியாசத்தில் ஐஹேம் முறியடித்துள்ளார். இவரது வேகம் பிரபல ஓட்டப்பந்தய ஜாம்பவானான உசைன் போல்ட்டை (9.58 வினாடிகளில்) நினைவுப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும் கூறுகின்றனர்.

News August 29, 2024

ALERT: இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், வலுவான தரைக்காற்று 30 – 40KM வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

News August 29, 2024

Current Affairs: கேள்விகளுக்கு பதில்

image

இன்று 11.30 மணிக்கு <<13965828>>Current Affairs<<>>இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1.சீனா 2. அமெரிக்கா 3. கால் பந்தாட்டம் 4. அடிப்படை உரிமைகள் (பிரிவு 12 – 35 வரை ) அடங்கிய பகுதி III 5.கீதாஞ்சலி ஸ்ரீ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News August 29, 2024

வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர்

image

புதுக்கோட்டையின் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் தான், வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர். இவர் ஆஸி. பெண் மோலி ஃபிங்கை கடந்த 1915ஆம் ஆண்டு கரம்பிடித்தார். வாரிசு பிரச்னை காரணமாக, இந்திய அரசர்கள் ஆங்கிலேயப் பெண்களை முதல் திருமணம் செய்யக்கூடாது என்பது பிரிட்டிஷ் கொள்கை. அதை மீறியதற்காக பல்வேறு இன்னல்களுக்குள்ளாக நேரிட்டதால் அவர், ஃபிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

News August 29, 2024

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

image

ஜீவா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பிளாக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவின் கண்கள் படத்தை இயக்கிய பாலசுப்ரமணி இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி இசையமைத்துள்ளார். மாநகரம், டாணாக்காரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

News August 29, 2024

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

image

மத்திய- வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மத்தியமேற்கு, அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் எனவும், 2 தினங்களில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது.

News August 29, 2024

வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: ₹100 கோடி ஒதுக்கீடு

image

2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 1.77 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய அரசாணையும் வெளியிட்டுள்ளது. அத்துடன், வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

News August 29, 2024

அம்பானியை முந்திய அதானி

image

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை அதானி முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2024ம் ஆண்டின் ஹுரன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியலில் அதானி ₹11.6 லட்சம் காேடியுடன் முதலிடத்திலும், அம்பானி ₹10.14 லட்சம் காேடியுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். சிவ் நாடார் (₹3.14 லட்சம் காேடி), சைரஸ் பூனாவாலா (ரூ.2.89 லட்சம் கோடி), திலிப் சங்க்வி(₹2.49 லட்சம் கோடி) ஆகியோர் 3,4,5 வரையிலான இடங்களில் உள்ளனர்.

error: Content is protected !!