news

News August 29, 2024

உச்சத்தை தொட்ட Stock Market

image

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பிற்பகல் வர்த்தகத்தின்போது, 82,285 என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் 349 புள்ளிகள் உயர்வுடன் 82,135 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் 4%, பஜாஜ் பைனான்ஸ் 2.4%, எச்சிஎல் டெக் பங்கு 1.7%, ஐடிசி, ரிலையன்ஸ் பங்குகள் தலா 1.5% உட்பட 12 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

News August 29, 2024

இனி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்

image

திருப்பதியில் ஆதார் கார்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் முறைகேடாக லட்டை அதிக விலைக்கு விற்பதை தவிர்க்கும் நோக்கில், இன்று முதல் இந்த முறையை கொண்டுவந்துள்ளது. மேலும், ஒரு நபருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதலாக லட்டு தேவைப்படுவோர் ₹50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News August 29, 2024

நடிகர் முகேஷை கைது செய்ய தடை

image

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் முகேஷை கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமின் கேட்டு முகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம்., இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், பாலியல் புகாருக்குள்ளான முகேஷ், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வாக நீட்டிக்க, முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

News August 29, 2024

AI தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தும்: முகேஷ் அம்பானி

image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்தியாவில் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது என முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார். AI இன் வளர்ச்சி, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். AI கட்டமைப்புகளை மேம்படுத்த ஜியோ பிரைன் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News August 29, 2024

‘பேட்மிண்டனின் கோலி’ என பெயர் எடுக்க வேண்டும்!

image

எதிர்காலத்தில் பேட்மிண்டனின் விராட் கோலி என்ற பெயரை பெறுவதே தனது இலக்கு என்று இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீரர் லக்க்ஷயா சென் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக ‘கிங்’ கோலி நிறைய சாதனைகளைப் படைத்துள்ளதாகக் கூறிய அவர், அதே சாதனையை பேட்மிண்டனில் தானும் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.

News August 29, 2024

மூலிகை: தீராப் பிணிகளை தீர்க்கும் பொற்சீந்தில்

image

தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்தில் உடல் நலனை மீட்டெடுக்க பொற்சீந்தில் மூலிகை போதும் என தேரன் வெண்பா கூறுகிறது. பால்மடைன், பெர்பெரின், டினோஸ்போரின், ஃபுரானோலேக்டோன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த இலைச் சாற்றை, சுக்குப் பொடி, பனைவெல்லம் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் உள்ளங்கை, பாத எரிச்சல், நீரிழிவு , வாத நோய் உள்ளிட்டவை கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News August 29, 2024

FIR-ஐ ரத்து செய்ய கோரிய பிரிஜ் பூஷன் மனு தள்ளுபடி

image

தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷன் மனுவை, டெல்லி HC தள்ளுபடி செய்தது. 6 பெண்கள் புகார் அளித்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? எனவும் நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். EX மல்யுத்த சங்கத்தலைவரான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து WFI தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

News August 29, 2024

ஜியோ பயனாளர்களுக்கு GOOD NEWS

image

ஜியோ பயனாளர்களுக்காக தீபாவளி முதல் 100ஜிபி இலவச Jio AI-Cloud திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜியோ 47ஆவது வருடாந்தர கூட்டத்தில் முகேஷ் அம்பானி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். அதன்படி, Jio பயனர்கள் 100 GB வரை இலவசமாக தங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், மற்ற அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தரவுகளை பாதுகாப்பாகச் சேமித்துக் கொள்ளலாம்.

News August 29, 2024

YSR காங்கிரசுக்கு பின்னடைவு .. 2 எம்பிக்கள் திடீர் ராஜினாமா

image

ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சியின் 2 மாநிலங்களவை எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொபிதேவி வெங்கட ரமனா, பீடா மஸ்தான் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். YSR காங்கிரஸ் கட்சியில் இருந்தும் 2 பேரும் விலகியுள்ளனர். விரைவில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர போவதாக தெரிவித்துள்ளனர். YSR காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியே காரணமாக கூறப்படுகிறது.

News August 29, 2024

மூலிகை: தீராப் பிணிகளை தீர்க்கும் பொற்சீந்தில்

image

தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்தில் உடல் நலனை மீட்டெடுக்க பொற்சீந்தில் மூலிகை போதும் என தேரன் வெண்பா கூறுகிறது. பால்மடைன், பெர்பெரின், டினோஸ்போரின், ஃபுரானோலேக்டோன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த இலைச் சாற்றை, சுக்குப் பொடி, பனைவெல்லம் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் உள்ளங்கை, பாத எரிச்சல், நீரிழிவு , வாத நோய் உள்ளிட்டவை கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!