news

News August 30, 2024

இன்று இடி மின்னலுடன் மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், இன்று வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News August 30, 2024

முதலீட்டாளர்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்து

image

அமெரிக்காவில் உள்ள CM ஸ்டாலின், இன்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். San Francisco நகரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்களுடன், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 17 நாள் பயணமாக USA சென்றுள்ள CM, அங்கிருந்து தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து வரவுள்ளார். நாளை அவர், புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2024

வைணவ கோயில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்

image

தமிழகத்தில் உள்ள முக்கியமான வைணவ கோயில்களுக்கு, கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்குட்பட்ட 1000 பேர் (உணவு உட்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர். <>இந்த<<>> இணையதளத்தில் விண்ணப்பத்தை Download செய்து, சம்பந்தப்பட்ட HRCE மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் தரலாம். பயண நாள்: செப்.21, 28, அக்.5, 10.

News August 30, 2024

ஓரெழுத்து ஒருமொழி!

image

*ஆ – என்றால் பசுவாகும்!
*ஈ – என்றால் பூச்சியினம்!
*ஊ – என்றால் ஊன்ஆகும்!
*ஏ – என்றால் அம்பாகும்!
*ஐ – என்றால் தலைவனாம்!
*ஓ – என்றால் உயர்வாகும்!
*கா – என்றால் சோலை!
*கூ – என்றால் நிலம்!
*சீ – என்றால் திருமகள்!
*து – என்றால் அசைத்தல்!
*நே – என்றால் அன்பு!

News August 30, 2024

இறுதிச் சடங்கு முன்பணத்தை உடனே வழங்குக: EB

image

EB ஊழியர்களின் இறுதிச் சடங்கு நிதியை, உடனே விடுவிக்க EB உத்தரவிட்டுள்ளது. பணியில் மரணிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தற்போது, ₹25,000 முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை தாமதமாக வழங்குவதாக EBக்கு புகார் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ள EB, அந்தந்த வட்டத்தின் தற்காலிக முன்பணத்தில் இருந்து நிதி வழங்க அதிகாரிகளுக்கு மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த உத்தரவிட்டுள்ளது.

News August 30, 2024

வயசானாலும் ஸ்டைலும், அழகும் நிலைக்க வேண்டுமா?

image

*நாள்தோறும் ஒரு இளநீர் பருகுவதால், வயோதிக தோற்றத்தை வெகுகாலம் தவிர்க்க முடியும்.
*நாள்தோறும் உணவில், பழ வகைகளை சேர்ப்பதால் இளமை தோற்றம் நிலைத்திருக்கும்.
*பாதாம், பிஸ்தா, வால்நட், Dry அத்தி, Dry திராட்சை, பேரிச்சம் பழத்தை ஊறவைத்து அரைத்து பருகினால், என்றும் இளமைதான்.
*வாரந்தோறும் எண்ணெய் நீராடுதல், கற்றாழை ஜூஸ் அல்லது அப்படியே சாப்பிடுவதும் இளமையை தக்க வைக்கும். Share It Now.

News August 30, 2024

லோகேஷுக்காக காத்திருந்தேன்: நாகார்ஜுனா

image

கைதி படத்திலிருந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற காத்திருந்ததாக, நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், “கூலி படத்தில் தன்னை இணைத்த லோகேஷுக்கு நன்றி. புதிய படத்தில் இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில், சைமன் என்ற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார்.

News August 30, 2024

மருத்துவப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புக: EPS

image

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை, போர்க்கால அடிப்படையில் அரசு சரிசெய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் அவதிப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு தீர்வு காணும் வகையில், சுகாதாரத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

News August 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 38
▶குறள்: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
▶பொருள்: பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

News August 30, 2024

வளர்ச்சிக்கான மிகப் பெரிய எஞ்சின் INDIA: முகேஷ் அம்பானி

image

உலகப் பொருளாதாரம் என்ற ரயிலில், இந்தியா ஒரு பெட்டி அல்ல; மிகப்பெரிய வளர்ச்சிக்கான எஞ்சின் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். Reliance நிறுவன 47ஆவது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலகில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், வளர்ந்த பாரதம் என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது என்றார். மேலும், 2027இல் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!