news

News August 30, 2024

பாலியல் துன்புறுத்தலா? இதில் பெண்கள் புகாரை பதிவிடலாம்

image

பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், எங்கு புகார் அளிப்பது எனத் தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் SHe-Box என்ற பெயரில் புதிதாக இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இதில் பெண்கள் ஆன்லைனில் புகாரை பதிவு செய்து, அதன் விசாரணை நிலவரத்தையும் அறிய முடியும். இந்தத் தகவலை உங்கள் சகோதரிகள், தோழிகளுக்கு பகிரலாமே.

News August 30, 2024

பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

CM ஸ்டாலின் தலைமையில் San Franciscoவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் TRB ராஜா X பதிவில், சென்னை சிறுசேரியில் NOKIA ஆராய்ச்சி மையம், தரமணியில் Applied Materials-இன் செமி கண்டக்டர் ஆலை, செம்மஞ்சேரியில் மைக்ரோசிப் ஆலை, Paypal-இன் AI மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News August 30, 2024

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைகிறது

image

மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில், மத்திய மேற்கு- அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News August 30, 2024

பார்வையாளர்களை கதறி அழ வைத்த முகமது அலி!

image

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, எதிரிகளை துவம்சம் செய்து மட்டுமே பார்த்த மக்கள், அன்றைக்கு அவர் கொடூரமாக அடி வாங்குவதை கண்டனர். நரம்பு தளர்ச்சி பாதித்த அலியை, அவரது சிஷ்யன் லேரி ஹோம்ஸ் மூர்க்கமாக தாக்கினார். அலியின் முகத்தில் ரத்தம் கொட்டியதை பார்த்த அனைவரும் எழுந்து நின்று Stop The Fight என கத்தியதால் அந்தச் சண்டை நிறுத்தப்பட்டது. இந்த சண்டை தான் உலகுக்கு மற்றொரு <<13972164>>அதிரடி பாக்சரை<<>> தந்தது.

News August 30, 2024

பாஜகவில் இன்று இணைகிறார் சம்பாய் சோரன்

image

ஜார்க்கண்ட் Ex CM சம்பாய் சோரன், இன்று பாஜகவில் இணைகிறார். டெல்லியில், அமித் ஷா, JP நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான அவர், ஹேமந்த் சோரன் கைதுக்கு பிறகு CM ஆனார். பின்னர் ஜாமினில் ஹேமந்த் விடுதலையானதால் CM பதவியிலிருந்து விலகிய அவர், அதிருப்தியால் JMM கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

News August 30, 2024

வேகமாக பரவி வரும் சண்டிபுரா வைரஸ்

image

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சண்டிபுரா வைரஸ் தொற்று பரவி வருவதாக WHO எச்சரித்துள்ளது. ஜூன்-ஆக.15 வரை, நாடு முழுவதும் 82 பேர் பலியானதாகக் கூறியுள்ள WHO, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் எனத் தெரிவித்துள்ளது. காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடு, மூளைக் காய்ச்சல் போன்றவை அறிகுறிகள். 1965இல், மகாராஷ்டிரா சண்டிபுராவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

News August 30, 2024

ராஜயோக வாழ்வை அருளும் சுக்கிரன்

image

ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும், அதை நிவர்த்தி செய்யும் வல்லமை சுக்கிரனுக்கு உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. அசுரர்களின் ஆசானான சுக்கிரனுக்கு விரதமிருந்து, கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, சுக்ர ஓரையில் அபிஷேகம் செய்து வெண் நிற வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, மொச்சை சுண்டலை படைத்து, சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கினால், ராஜயோக வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

News August 30, 2024

இன்று முதல் 3 நாள்களுக்கு 715 சிறப்பு பேருந்துகள்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 715 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in என்ற இணையதள முகவரி அல்லது tnstc official app மூலம் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பிற மாவட்டங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பவும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

News August 30, 2024

1,500 பெண்களுக்கு வேலை: 2ஆவது நாள் சிறப்பு முகாம்

image

12ம் வகுப்பு, ITI முடித்த 1,500 பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் சிறப்பு முகாம், 2வது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு-பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் சார்பில் இந்த முகாம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று இந்த முகாம் நடைபெறவுள்ளது. SHARE IT

News August 30, 2024

இஸ்லாம் போதிக்கும் அறநெறி

image

முஸ்லிம் மதத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் போதிக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கு காணலாம். *எல்லா நன்மைக்கும் பணிவு வழிவகுக்கும் *ஆயுள் நீடிக்க நற்செயலில் ஈடுபட வேண்டும் *எளிமையும், நேர்மையுமே உயர்ந்த பண்புகள் *சாந்த குணமுள்ளவர் சமூகத்திற்கு நன்மை செய்பவர் *நற்குணம் உள்ளவரே நல்ல நண்பர் ஆவார் *மவுனத்தை விட சிறந்தது வேறு எதுவுமில்லை *பிரார்த்தனை ஒன்றே விதியை மாற்றும்

error: Content is protected !!