news

News August 30, 2024

பாக்.,கிற்கு இந்திய அணி வர வேண்டாம்: கனேரியா

image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வர வேண்டாம் என அந்நாட்டு EX வீரர் கனேரியா கூறியுள்ளார். இந்திய அணி தற்போதையை சூழ்நிலையில் PAK வருவது சிறந்ததல்ல என்றும், இதனை PCB & ICC பேசி முடிவெடுக்க வேண்டும் என்றார். இந்திய அணி ஆட்டங்களை ஹைபிரிட் மாடலில் (வேறு நாட்டில்) நடத்தவும் வேண்டுகோள் விடுத்தார். சாம்பியன் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பாக்.,கில் நடைபெறுகிறது.

News August 30, 2024

‘கூலியில்’ ப்ரீத்தியாக கலக்க போகும் ஸ்ருதி

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தில், ‘ப்ரீத்தி’ என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. நேற்று நடிகர் நாகார்ஜுனா படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

News August 30, 2024

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

image

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 100 மீட்டர் பிரிவில் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. ஓட்டப்பந்தய போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

News August 30, 2024

ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட உத்தரவு

image

ஹேமா கமிட்டி அறிக்கையை ஒரு வாரத்தில் முழுமையாக வெளியிட வேண்டும் என கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக எழுந்த புகார் குறித்து நீதிபதி ஹேமா ஆய்வு செய்து அறிக்கை அரசிடம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை தொடர்ந்து பாலியல் புகாரில் நடிகர்கள், இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கேரள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது.

News August 30, 2024

பங்குச்சந்தை ஆபத்தானதா?

image

சிலர் பங்குச்சந்தை என்றாலே, சூதாட்டம் என கருதுகின்றனர். ஆனால், பங்குச்சந்தையில் பல்வேறு வகையான வணிகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதில், Intraday Trading, F&O போன்ற ஊக வணிகங்கள் முதலுக்கே மோசம் என்ற நிலையை முதலீட்டாளர்களுக்கு உருவாக்குகின்றன. இதனால், எப்போதும் நல்ல நிறுவனங்களில் நீண்ட கால அளவில் முதலீடு செய்வதே நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். <<-se>>#Sharemarket<<>>

News August 30, 2024

குழந்தைகள் கவனிக்கிறார்கள் ஜாக்கிரதை..!

image

குழந்தைகளிடம் ஒழுக்கத்தை விதைப்பது பெற்றோரின் கடமை. ஆனால் சிலர் இதனை செய்வதில்லை. குழந்தைகளை பைக்கில் வைத்துக் கொண்டே சிக்னலை மீறுவது; சாலையில் உமிழ்வது; சிகரெட் புகைப்பது என சில பெற்றோர்களை காண முடிகிறது. தந்தையை ஹீரோவாக கருதும் குழந்தையின் மனதில், விதிமீறல் என்பது சர்வசாதாரணமாகி விடும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் முன்பு, நாம் ஒழுக்கமாக நடந்துகொள்ள பழகுவோம்.

News August 30, 2024

தங்க மகளுக்கு பிரதமர் வாழ்த்து

image

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அவனி லெகாரா மற்றும் மோனா அகர்வால் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 பாரா ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்த அவனி லெகராவுக்கு வாழ்த்து கூறிய அவர், மோனா அகர்வால் அர்ப்பணிப்போடு விளையாடியதையும் பாராட்டியுள்ளார். இருவரையும் நினைத்து நாடு பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

News August 30, 2024

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான முதல் தமிழ் படம்

image

யோகிபாபு, ஏகன் நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம், அக்லேண்ட் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டு செப்.18ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. அமெரிக்காவில் 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திரைப்பட விழாவில் இதுவரை எந்த தமிழ் படமும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 12 -21ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.

News August 30, 2024

சரித்திர சாதனை படைத்த தங்க மகள்

image

பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் அவனி <<13976372>>லெகாரா<<>>. 22 வயதான அவர், ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்குப் பின் 2 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்திய பாரா ஒலிம்பிக் வீரர் என்ற பெருமையும் பெறுகிறார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவனி தங்கம் வென்றிருந்தார். நமது தங்க மகளுக்கு ஒரு லைக் போடுங்க.

News August 30, 2024

வாழ்நாள் உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை

image

பட்ஜெட்டுக்கு பின், இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டாலும், இன்றைய வர்த்தகத்தில் வாழ்நாள் உச்சத்தை எட்டியது. நிஃப்டி அதிகபட்சமாக 25,268 புள்ளிகள் வரை உயர்ந்து, 25,235 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பொறுத்தமட்டில் 231 புள்ளிகள் உயர்ந்து, 82,365 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ஐடி, மெட்டல், வங்கி, பார்மா உள்ளிட்ட துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

error: Content is protected !!