news

News August 30, 2024

பிரதமரின் அடுத்த வெளிநாட்டு பயணம்

image

பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 3 – 4ல் புரூனேவுக்கும், 4 – 5ல் சிங்கப்பூருக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புரூனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (9 மணி வரை) 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி நாமக்கல், மயிலாடுதுறை, தென்காசி, குமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். எனவே, வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News August 30, 2024

மூலிகை: மேனியை பொன் நிறமாக்கும் தேகராஜம்

image

‘பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை’ என்று அகத்தியர் பாடல் போற்றிய மூலிகை தேகராஜம் எனும் மஞ்சள் கரிசாலை. விடிலோலேக்டோன், அமைரின், லுடியோலின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தூயத்தேன் சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, 48 நாட்கள் காலை வேளையில் பருகிவந்தால், நமைச்சல், அரிப்பு போன்ற சருமப் பிரச்னைகள் தீருவதோடு, உடல் பொலிவும் பெறும் என கூறுகின்றனர்.

News August 30, 2024

மத்திய அரசின் திணிப்பை ஏற்க மாட்டோம்: பொன்முடி

image

கல்வி துறையில் மத்திய அரசின் திணிப்பை ஏற்க மாட்டோம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இரு மொழி கொள்கையில் TN உறுதியாக உள்ளதாகவும், அதை பாதிக்கும் எந்த ஒரு கல்விக் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் எனவும் உறுதியளித்தார். மத்திய அரசின் நலத்திட்டங்களையும், தமிழக பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக தேசிய கல்விக் கொள்கையில் இணைய தமிழகத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

News August 30, 2024

பிஎம்ஸ்ரீ திட்டம்: மத்திய அரசு பிடிவாதம்

image

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட கோரி ஸ்டாலினுக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடாக இருக்கக்கூடாது. தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் மாணவர்கள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். தாய் மொழியுடன் பன்மொழி கற்றலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை தர வலியுறுத்தியுள்ளார்.

News August 30, 2024

Term Insurance, ULIP என்ன வித்தியாசம்?

image

லைஃப் இன்சூரன்ஸில் <<13977236>>Term<<>> Insurance, ULIP என 2 வகை உண்டு. இதில் Term Insurance என்பது முழுக்க முழுக்க பயனாளியின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. இதில் பிரீமியம் குறைவாக இருக்கும். முதலீடு, சேமிப்பு போன்ற எந்த வசதியும் இதில் கிடையாது. அதேநேரம், ULIP ஆயுள் காப்பீடு மட்டுமின்றி முதலீடு அம்சம் கொண்டிருப்பதால், பிரீமியம் அதிகமாக இருக்கும்.

News August 30, 2024

அடுத்தடுத்து பதக்கங்களை குவிக்கும் இந்தியா

image

பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தனது 4ஆவது பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். அதேபோல், 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

News August 30, 2024

சட்டம் அறிவோம்: பெண்களை கைது செய்வதற்கான விதிகள்

image

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46இன் படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களை கைது செய்து, காவலில் வைக்க முடியாது. அவரச வழக்காக இருந்தால் மட்டுமே, இந்த நேரத்தில் கைது செய்யலாம். அதுவும் மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற வேண்டும். பெண் போலீஸ் மட்டுமே, குற்றம்சாட்டப்பட்ட பெண்களை கைது செய்ய முடியும். பெண் போலீஸ் இல்லாத சூழலில், ஆண் அதிகாரி கைது செய்தால், அவரை தொடக் கூடாது. Share it. <<-se>>#Law<<>>

News August 30, 2024

‘தி கோட்’ FDFS: 1 டிக்கெட் விலை இவ்வளவா?

image

‘தி கோட்’ படத்தின் முன்பதிவு ஒரு சில திரையரங்குகளில் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் FDFS காட்சிக்கு உணவுடன் சேர்த்து ₹390 வசூலிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது மட்டுமில்லாமல், உணவும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

Term Insurance ப்ரீமியம் குறைகிறது?

image

Term Insurance திட்டங்களுக்கு GST வரி விலக்கு வழங்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. செப்.9ஆம் தேதி நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், முதலீடு அடிப்படையிலான லைஃப் இன்சூரன்ஸுக்கு (ULIP) இந்த விலக்கு கிடைக்காது என்கிறார்கள். Term Insuranceக்கு தற்போது 18% GST வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!