news

News August 31, 2024

S.C. 75ம் ஆண்டு நாணயம் இன்று வெளியீடு

image

சுப்ரீம் கோர்ட் தொடங்கப்பட்டு 75 ஆண்டு ஆவதை முன்னிட்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் PM மோடி கலந்து கொண்டு மாவட்ட நீதிபதிகளின் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். இதேபோல், அந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட உள்ளார். சுப்ரீம் கோர்ட் 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டது.

News August 31, 2024

சென்னையில் formula 4 ரேஸ் இன்று தொடக்கம்

image

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் formula 4 கார் ரேஸ் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தீவுத்திடலில் நடக்கவுள்ள இப்போட்டிக்காக, 3.5 KM, துார சாலையில், 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 200KM வேகத்தில் கார்கள் சீறிப்பாய உள்ளன. இதற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் பிற்பகல் 1.30 மணியில் இருந்து தொடங்குகின்றன. 9,000 ரசிகர்கள் இதனை கண்டுகளிக்க உள்ளனர்.

News August 31, 2024

UPI சேவையில் மற்றுமொரு மைல்கல்!

image

UPI சேவையில், குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி வாடிக்கையாளர்கள் UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது UPI எண்ணை தட்டச்சு செய்யத் தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை செய்யலாம். மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஃபின்டெக் விழாவில், NPCI, IRCTC, கோரோவர் ஆகிய தளங்கள் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளன.

News August 31, 2024

தினமும் குளிக்கும் முறை.. ஆயுர்வேதம் சொல்வதென்ன?

image

தினமும் எத்தனை முறை குளிக்க வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேதத்தில் சில யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். சூரியன் உதிக்கும் முன் வயிறு சுத்தமாகவும், பற்கள் சுத்தமாகவும், உடல் சுத்தமாகவும் இருப்பது அவசியம். இரண்டாவது முறை, மாலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது தசைகள் மற்றும் நரம்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

News August 31, 2024

பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா

image

U20 உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பதக்கக் கணக்கை வீராங்கனை ஆர்த்தி (17) தொடங்கி வைத்துள்ளார். பெருவில் நடந்த இத்தொடரின் பெண்கள் 10,000 மீ நடை ஓட்டப்பந்தயப் போட்டியில், பந்தய தூரத்தை 44 நிமிடங்கள் 39.39 வினாடிகளில் கடந்த அவர், 3ஆவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீன வீராங்கனைகளான பைமா, மெய்லிங் ஆகியோர் முறையே தங்கம் & வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினர்.

News August 31, 2024

இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும்

image

தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆகஸ்ட் மாதத்திற்கான பொருள்களை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் இன்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News August 31, 2024

JOB ALERTS: INDO-TIBET படையில் வேலை

image

இந்தோ – திபெத் படையில் காவலர் பதவிக்கு (சமையல் சேவை ) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 819 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 18-25 ஆகும். விண்ணப்ப பதிவு வரும் 2ம் தேதி ஆன்லைனில் தொடங்கும். வேலைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவலை itbpolice. nic. in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பகிருங்கள்.

News August 31, 2024

ரஜினியை வைத்து DMK மூத்த தலைவர்கள் அவமதிப்பு

image

ரஜினியை வைத்து DMK மூத்த தலைவர்கள் அவமானப்படுத்த பட்டு உள்ளதாக ADMK விமர்சித்துள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து ADMK துணை பொது செயலாளர் K B முனுசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டினார், இப்போது ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு பட்டம் சூட்ட போகிறார் என்று கூறினார். முனுசாமி குற்றசாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?

News August 31, 2024

எல்லோரும் கோவைக்கு வருகிறார்கள்: அசாம் CM

image

வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சமடைவதை தடுக்குமாறு, CM ஸ்டாலினை அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் நோக்கில் வந்ததாக கூறினர்” எனத் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக சில நாள்களுக்குமுன் வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2024

தமிழகத்தில் இன்று முதல் 6 நாள்களுக்கு மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, செப்.1-5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, திருவள்ளூரில் சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.

error: Content is protected !!