news

News August 31, 2024

மத்திய அரசில் பணி.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

image

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்த 18 – 23 வயதுடைய ஆண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் 39 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>https://cisfrectt.cisf.gov.in<<>> என்ற இணையதளத்தில் செப்.30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News August 31, 2024

துலீப் கோப்பையில் சூர்யகுமார் விளையாடுவதில் சிக்கல்?

image

காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் துலீப் கோப்பை தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. புச்சிபாபு தொடரில் தமிழக அணிக்கு எதிராக அவர் விளையாடியபோது, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் இன்னும் முழுமையாக சரியாகாததால் துலீப் கோப்பையில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துலீப் டிராபி தொடருக்கான இந்திய ‘சி’ அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 31, 2024

பங்குச்சந்தை அறிவோம்: Promoter Vs Share Holders

image

நீங்கள் ஒரு மளிகை கடை நடத்தி வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த கடையை விரிவாக்கம் செய்ய ₹5 லட்சம் தேவைப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் கடையின் மதிப்பு ₹5 லட்சம் என எடுத்துக் கொள்வோம். உங்கள் நண்பர்கள் 5 பேர் ₹1 லட்சம் வீதம், தேவைப்படும் ₹5 லட்சத்தை தருகிறார்கள். மளிகை கடைக்கு நீங்கள்தான் Promoter. உங்கள் நண்பர்கள்தான் Share Holders. Reliance நிறுவனத்தின் Promoter யார்? <<-se>>#sharemarket<<>>

News August 31, 2024

3 மாதம் தமிழகம் நிம்மதியாக இருக்கும்: ஆர்.பி.உதயகுமார்

image

அண்ணாமலை வெளிநாடு சென்றதால் அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகம் நிம்மதியாக இருக்கும் என EX அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி, தொழில், ரயில்வே திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதைப் பற்றி கேள்வி எழுப்ப தமிழக பாஜகவினர் தயாராக இல்லை எனவும் விமர்சித்தார். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே தரவும் வலியுறுத்தியுள்ளார்.

News August 31, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், நாமக்கல், சேலம், மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News August 31, 2024

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு FIA அனுமதி

image

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு FIA முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு மாலை 6 மணியளவில் கிடைக்கும் எனவும், இரவு 7 மணியளவில் பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் போட்டி நடத்தும் அமைப்பின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

News August 31, 2024

38 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் மோதும் சத்யராஜ்

image

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அவர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி உடன் அவர் நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சுமார் 38 ஆண்டுகளாக பின் இருவரும் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News August 31, 2024

பிசினஸ் தொடங்க விருப்பமா?

image

குறைந்த முதலீட்டில் பிசினஸ் தொடங்க விரும்புபவர்கள் ஊறுகாய் வியாபாரத்தை தொடங்கலாம். இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் வெவ்வேறு வகையான ஊறுகாய் மற்றும் சட்னிகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. உங்களுக்கு கைப்பக்குவத்தோடு ஊறுகாய் செய்யத் தெரிந்தால், இந்த தொழில் நல்ல தேர்வாக இருக்கும். நல்ல முறையில் பேக் செய்து அருகில் இருக்கும் மளிகை கடைகளில் விற்பனைக்கு கொடுக்கலாம். All the best.<<-se>>#Business<<>>

News August 31, 2024

நடிகர் முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை

image

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் முகேஷ், MLA பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகை பாலியல் குற்றச்சாட்டு ஆட்டிப் படைக்கிறது. இந்த சர்ச்சையில் சிக்கிய நடிகரும், கொல்லம் தொகுதி MLAவுமான முகேஷ் பதவி விலகக்கோரி 2 நாட்களாக காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News August 31, 2024

நாதகவில் இருந்து விலகல்? காளியம்மாள் விளக்கம்

image

சீமான் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோவால் கடும் அப்செட்டில் இருந்த, நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், அரசியல் கட்சியில் கருத்து முரண்கள் ஏற்படுவது இயல்புதான். எனவே, இன விடுதலையையும், கட்சியின் இதர சூழலையும் கருத்தில் கொண்டு நாதகவில் தொடர்ந்து பயணிக்கிறேன் என விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!