India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானின் தெற்குக் கடலோரப் பகுதியில், ‘மகா நிலநடுக்கம்’ ஏற்படும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முதல்முறையாக எச்சரித்துள்ளது. கியூஷூ தீவில் ஆக., 8ஆம் தேதியன்று 7.1 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அழுத்தம் ஜப்பானின் பசிபிக் கடல் முழுவதும் பரந்துள்ளது. இது குறித்து ஆய்ந்த விஞ்ஞானிகள் ஒரு வாரத்துக்குள் மகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்
மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு, பிரதமர் மோடி & எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மறக்க முடியாத சாதனையை செய்த அமனை இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர் என மோடி தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராகுல், அமனின் அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் நாட்டு மக்கள் போற்றுகின்றனர் எனக் கூறியுள்ளார்.
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடியும்போது, இந்தியாவால் சொந்தமாக ஒரு பயணிகள் விமானம் தயாரிக்க முடியாதா என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய விமானச் சட்ட மசோதா 2024 மீதான விவாதத்தின்போது பேசிய அவர், “மசோதாவில் உற்பத்திக்கான தரம் நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் விமான தயாரிப்பில் அமெரிக்கா & பிரான்ஸை நம்பி இருக்கும் இந்தியாவிடம் அதனை வசதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் RJ பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அதன் 2ஆம் பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்தப் படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே இதிலும் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
BAN-க்கு எதிரான டெஸ்ட் தொடரில், முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ODI உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவரை, துலீப் டிராபியில் விளையாட வைத்து அவரது உடற்தகுதியை பரிசோதிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர், பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்திய வங்கிகளில் கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளார். மூலதனம் & பணியாளர் ஊதியத்திற்கு இடையேயான இடைவெளியை அதிகரிப்பதால், தொழில்நுட்பம் & பணியாளர் பங்களிப்பு 74:26 என்ற அளவில் மாறியுள்ளது. RBIஇன் ‘கரன்சி & நிதி’ஆய்வறிக்கையை ஆராய்ந்தால், இனிவரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மாநில வாரியாக மத்திய அரசு அளித்த நிதி குறித்த விவரம்: *குஜராத்: அகமதாபாத் ₹6,400 & சூரத் ₹4,700 கோடி (2 கட்டங்களுக்கு) *உ.பி: 4 திட்டங்களுக்கு ₹8,000 கோடி *டெல்லி: இயங்கிவரும் கட்டுமானத்திற்கு ₹11,000 கோடி *பெங்களூரு: செயல்படும் திட்டத்திற்கு ₹16,000 கோடி *மும்பை: 3வது கட்டத்திட்டத்திற்கு ₹12,500 கோடி. ₹63,246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டத்திற்கு ₹0.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 57 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், போர்ட்டோ ரிக்கோ வீரர் டோரியன் க்ரூஸை 13 – 5 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.