news

News September 3, 2024

ராணுவத்தை மேம்படுத்த நவீன ஆயுதங்களுக்கு ஒப்புதல்

image

இந்திய கப்பற்படைக்கு ₹70,000 கோடி மதிப்புள்ள 7 நவீன போர் கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கு 1,700 நவீன டாங்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் ₹1.3 லட்சம் கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு, இன்று நடைபெற உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 3, 2024

புழக்கத்தில் உள்ள ₹2,000 நோட்டுக்கள் எவ்வளவு?

image

பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக RBI அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த போது, ₹3.56 லட்சம் கோடி நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது 97.96% திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 19 RBI அலுவலகங்களில் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

News September 3, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் 3ஆவது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 முதல் 4% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்திற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியானாலும், ஜூலை முதல் நிலுவைத் தொகை கிடைக்கும் என நம்பப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

News September 3, 2024

ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்த செல்வப்பெருந்தகை

image

மாநில பாட திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜக போக்கையே காட்டுவதாக செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். ஆர்.என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பாஜகவின் செய்தித் தொடர்பாளரா என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக விரோத பேச்சை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறியுள்ளார்.

News September 3, 2024

நம்ம தமிழ் பெருமை: தினம் 2

image

*சிலப்பதிகாரம்: ஆசிரியர்- இளங்கோவடிகள் *காலம்- கி.பி. 2. *பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை. *அண்ணன் சேரன் செங்குட்டுவன். *இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு தங்கிய இடம்- குணவாயிற் கோட்டம். *சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த அடிகள்- 5001. *காதைகள்- 30. *காண்டங்கள்- 3. *பாவகை- நிலைமண்டில ஆசிரியப்பா. *புகார் காண்டத்தில் உள்ள காதைகள்- 10

News September 3, 2024

அரசாணையை திரும்ப பெறுக: சீமான்

image

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்களை குறைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 250 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டிக்கத்தக்கது எனவும், ஆசிரியர் பணியிடங்களை குறைத்துதான் நிதி நிலையை சீர் செய்ய வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 3, 2024

SEBI தலைவர் மீது மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு

image

SEBI தலைவர் மாதாபி பூரி பூச்சுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் ZEE நிறுவனர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார். தனது நிறுவனம் ஒழுங்குமுறை ஸ்கேனரின் கீழ் வந்தபோது மாதாபி ஊழல் செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். SEBIயின் நடவடிக்கையால் தங்களது ZEE-SONY இணைப்பு தடைபட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த ஊழலுக்கு எதிரான போரில் தங்களுடன் மற்ற நிறுவனங்களும் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News September 3, 2024

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள்

image

*உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள், ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள், நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள், முன்னேறிக்கொண்டே இருப்பதுதான் முக்கியம். *கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *புத்திசாலித்தனம் மற்றும் நற்பண்பு இதுவே உண்மையான கல்வியின் குறிக்கோள். *நீங்கள் முழு படிக்கட்டுகளையும் பார்க்க வேண்டியதில்லை, வெறுமனே முதல் அடியை எடுத்துவையுங்கள்.

News September 3, 2024

மணிப்பூரில் 2 நாளில் 2 டிரோன் தாக்குதல்

image

மணிப்பூரின் இம்பாலில் நேற்று மாலை டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டதில் இளம்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது கடந்த 2ஆவது நாளில் 2ஆவது சம்பவமாகும். கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில், 2 வெடிகுண்டுகள் வீசி அடுத்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், செஜம் சிராங் என்ற கிராமத்தில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது.

News September 3, 2024

இதற்குத்தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்!

image

தங்கலான் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். இப்படியொரு சிறப்பான கதாபாத்திரம் கொடுத்ததற்கு பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்த அவர், இது போல மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் இனி வாழ்க்கையில் அமையுமா என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார். வருகிற செப்.6ஆம் தேதி இந்தி மொழியில் இப்படம் வெளியாக உள்ளது.

error: Content is protected !!