news

News September 3, 2024

ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்: சூப்பர் சான்ஸ்

image

ரயில்வேயின் தொழில்நுட்பம் சாராத பிரிவில் (NTPC) 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர் உட்பட 9 பதவிகள் நிரப்பப்படுகின்றன. +2, டிகிரி கல்வி தகுதி. வயது: 18 முதல் 36. ஆன்லைனில் செப்.9 முதல் அக்.10 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான Short Notice வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே தேர்வு வாரிய இணையத்தில் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

News September 3, 2024

எங்களுக்கு பாதுகாப்பு வேணும்: நிவேதா தாமஸ்

image

மலையாள சினிமாவில் நடிகைகள் உச்சபட்ச பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஹேமா கமிட்டி அம்பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ், மலையாள திரைப்பட நடிகை நிவேதா தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார். “ஹேமா கமிட்டி வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. இதுபற்றி எங்கள் குடும்பத்திலும் விவாதம் நடந்தது. பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம். இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு நன்றி” என்றார்.

News September 3, 2024

அள்ள அள்ள காலாவதியான நூடுல்ஸ்..! கொடுமை

image

திருச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி, அமேசான் தளத்தில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை ஆர்டர் செய்து சமைத்து சாப்பிட்டார். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மயக்கம் அடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த வியாபாரிகளின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

News September 3, 2024

சீமான் வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்

image

சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவான விவகாரத்தில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சண்டாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தது தொடர்பாக அவர் மீது பட்டாபிராம் காவல்நிலையத்தில் அண்மையில் எஸ்சி, எஸ்டி வன்காெடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் AC சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 3, 2024

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

யுபிஎஸ்சி தேர்வில் எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் சாதிக்க தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி வழங்க தாட்கோ சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், பயிற்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

News September 3, 2024

நிதி மாேசடியாளருக்கு ஜாமின் அளிக்கையில் கடும் நிபந்தனை

image

நிதி மோசடியில் ஈடுபடுவோருக்கு ஜாமின் அளிக்கையில் கடும் நிபந்தனை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்களுக்கு சுப்ரீம் காேர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.79 கோடி மாேசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு நாக்பூர் நீதிமன்றம் அளித்த ஜாமினை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், நிதி மாேசடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுபோல் அதிகம் பேரை மோசடி செய்வோருக்கு நிபந்தனையின்றி ஜாமின் அளிக்கக் கூடாது எனவும் ஆணையிட்டது.

News September 3, 2024

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்: ராதிகா

image

மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாக ராதிகா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று பேசிய அவர், “ஹேமா கமிட்டி ரிப்போர்ட் தாக்கல் பண்ணிருக்காங்க. ஆனால், அதில் பாதி பக்கங்களை காணோம். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். 36 பக்கங்களோ, எவ்வளவோ தெரியல. அப்போ கேஸு வீக் ஆயிருமே” என ராதிகா விமர்சித்துள்ளார்.

News September 3, 2024

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம்!

image

வந்தே பாரத் ரயில்களை போல ‘வந்தே மெட்ரோ’ ரயில்களும் தயாரிக்கப்படுகின்றன. இதில், பெரம்பூர் ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஒரு வந்தே மெட்ரோ ரயில், சோதனை ஓட்டத்துக்கு பிறகு, சென்னை பீச் – திருப்பதி இடையே இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ரயில் மும்பையில் இயக்கப்படவுள்ளதாக தற்போது ரயில்வே தரப்பில் கூறப்படுவதால் திருப்பதி பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News September 3, 2024

வாகன வேகம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

image

வாகன வேகத்தை கண்காணிக்க அனுமதிக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் 136ஏ பிரிவை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு SC உத்தரவிட்டுள்ளது. 136ஏ பிரிவில் வாகன வேகங்களை இயந்திரங்கள் மூலம் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த SC, 136ஏ சட்டப் பிரிவை அமல்படுத்தி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.

News September 3, 2024

DRDO அமைப்பில் வேலை: உடனே விண்ணப்பிங்க

image

DRDO அமைப்பில் தொழிற் பழகுநர் (APPRENTICE) அடிப்படையில் 54 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலையின் பதவிக் காலம் ஓராண்டு ஆகும். கல்வி தகுதி இன்ஜினியரிங் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி கடைசி நாள் ஆகும். வேலை பற்றிய கூடுதல் விவரங்களை DRDO இணையதளத்தில் காணலாம். இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை பிறருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!