news

News September 3, 2024

பணிந்தது NETFLIX.. இனி கட்டுப்பட்டு நடப்போம்

image

கந்தஹார் விமானக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான IC 814 என்ற வெப் சீரியஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் கேரக்டர்களின் பெயர்கள் சங்கர், போலோ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு சம்மன் அனுப்பியதன் பேரில், NETFLIX அதிகாரி இன்று நேரில் ஆஜரானார். அப்போது, இந்தியாவின் உணர்வுகளுக்கு இனி கட்டுப்பட்டு நடப்போம் என உறுதியளித்தார்.

News September 3, 2024

JOB ALERT: மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் வேலை

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) 1,130 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவலர் நிலையிலான அந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஆகும். எஸ்சி பிரிவினருக்கு 153, எஸ்டி பிரிவினருக்கு 161 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு CISF இணையதளத்தில் அக்டோபர் 1இல் தொடங்கவுள்ளது. SHARE IT

News September 3, 2024

RSS என்ன நீதிபதியா, நடுவரா?: ஜெய்ராம் ரமேஷ்

image

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்க RSS யார் என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அக்கணக்கெடுப்பு நடத்த RSS ஆதரவு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இனி சத்தமின்றி காங்கிரஸின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதியை மோடி, பாஜக “ஹைஜாக்” செய்யக்கூடும் எனவும் சாடியுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு அக்கணக்கெடுப்பை பயன்படுத்த கூடாதென RSS உத்தரவிட அது நீதிபதியா, நடுவரா என வினவினார்.

News September 3, 2024

ATM பணம் உச்சவரம்பு தெரியுமா?

image

நாளொன்றுக்கு ஒவ்வொரு வங்கியும் ATM.மில் தனித்தனி பண உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. அதைப் பார்க்கலாம். *SBI – ₹40,000 – ₹1,00,000 * இந்தியன் வங்கி – ₹25,000 – ₹1,00,000 * கனரா வங்கி – ₹75,000 – ₹1,00,000 * HDFC- ₹25,000 – ₹3,00,000 * ஆக்சிஸ் – ₹40,000 ₹3,00,000 * ICICI – 50,000 – ₹2,50,000 * BANK OF INDIA – ₹15,000- ₹1,00,000 * பேங்க் ஆப் பரோடா – ₹25,000 – ₹1,50,000. இத்தகவலை பகிருங்க.

News September 3, 2024

குரங்கம்மை: தமிழக அரசு எச்சரிக்கை

image

குரங்கம்மை பாதித்தோரிடம் இருந்து விலகியிருக்க வேண்டுமென்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. குரங்கம்மை பரவக்கூடியது என்பதால், வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும், உடனடியாக சிகிச்சையை தொடங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. குரங்கம்மை அறிகுறியோடு யாரேனும் வந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை கேட்டு காெண்டுள்ளது.

News September 3, 2024

மகளிர்.. கட்டாய டெஸ்ட்டுகள் இவை

image

பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை 12 கட்டாய ரத்த பரிசோதனை செய்வது உடல்நலனைக் காப்பதுடன் நோய்களை கண்டறியவும் உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முக்கியமாக வைட்டமின் B12&D, தைராய்டு, இரும்புச்சத்து, HBA1C, CRP, கொழுப்பு சத்துக்கள், ஹார்மோன் அளவுகள், சர்க்கரை அளவு, ரத்த சிகப்பு & வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, கால்சியம், அமினோ அமிலத்தின் அளவு குறித்து தெரிந்திருக்க வேண்டும். Share It!

News September 3, 2024

குஜராத் அருகே கடலில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்து

image

குஜராத் அருகே கடலில் விழுந்து இந்தியக் கடற்படையின் இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. குஜராத்தில் அண்மையில் புயல் வெள்ளத்தின்போது 67 பேரை மீட்க, அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. போர்பந்தர் அருகே நேற்றிரவு ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது விபத்தில் சிக்கியது. அப்போது ஹெலிகாப்டரில் 4 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் தேடும் பணி நடக்கிறது.

News September 3, 2024

ஆந்திரா வெள்ளம்: மேலும் 14 ரயில்கள் ரத்து

image

ஆந்திரா வழியே தமிழகம் வரும் மேலும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலங்கானாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல இடங்களில் தண்டவாளம் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வழியே தமிழகம் வரும் 18 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்று சென்னை, கோவைக்கு வரும் மேலும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளையும் இதேபோல் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்

image

நடிகர்களுக்கு சினிமாவையும் தாண்டி சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும். சில முன்னணி நடிகர்களுக்கே அது இருப்பதில்லை. பணம் கிடைத்தால் போதும் என எந்த விளம்பரத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில், பெரிய பான் மசாலா நிறுவனம், தங்கள் விளம்பரத்தில் நடிக்க, மாதவனை அணுகியுள்ளது. பல கோடி தருவதாகவும் கூறியுள்ளது. ஆனால், எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார்.

News September 3, 2024

திருப்பதி கோயிலில் இபிஎஸ் தரிசனம்

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோயிலுக்கு நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்த இபிஎஸ், அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர் வழிபாடு முடிந்து வெளியே வந்த இபிஎஸ், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து, அங்கிருந்து இபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.

error: Content is protected !!