news

News September 3, 2024

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்?

image

திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் கட்சி திமுக. அதேபோல தற்போது ஸ்டாலினும், கூட்டணி கட்சித் தலைவர்களை அரவணைத்து செல்கிறார். அதேசமயம், திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வந்தால் மகிழ்ச்சி தான் என சூசகமாக கூறியுள்ளார். முன்னதாக, திமுக கூட்டணியில் PMK உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

News September 3, 2024

திருச்சியில் மட்டும் இவ்ளோ நூடுல்ஸா..?

image

திருச்சியில் சீன நூடுல்ஸை சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை அடுத்து, அங்கு 800 கிலோ காலாவதியான நூடுல்ஸை அதிகாரிகள் கைப்பற்றினர். ஒருவேளை, இச்சம்பவம் நடந்திருக்காவிட்டால், இந்த நூடுல்ஸ்களை வழக்கம் போல மக்கள் வாங்கி இருப்பார்கள். இப்போது மக்கள் எழுப்பும் கேள்வி இதுதான். திருச்சியில் மட்டும் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ்கள் கைப்பற்றப்பட்டால், தமிழகம் முழுவதும் எத்தனை ஒளிந்திருக்கும்?

News September 3, 2024

‘நேசிப்பாயா’ டீஸர் குறித்த அறிவிப்பு வெளியானது

image

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘நேசிப்பாயா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் செ.5ம் தேதி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் ஆகாஷ் முரளி, நடிகர் முரளியின் இளையமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 3, 2024

புதிய வரவை களமிறக்கிய ஜாவா

image

இந்தியாவில் ஜாவா 42FJ பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அசத்தலான வடிவமைப்பில், 344 சிசி லிக்யூட் கூல் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் அறிமுகமாகியுள்ள ஜாவா 42FJ பைக், 21.45 பிஎச்பி பவரையும், 29.62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் டூயல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 1.99 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

News September 3, 2024

நிவின் பாலி மீது பரபரப்பு பாலியல் புகார்

image

பாலியல் புகாரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படவாய்ப்பு தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வைத்து தன்னை வன்கொடுமை செய்ததாக கேரள நடிகை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

News September 3, 2024

2.5 லட்சம் தொலைபேசி எண்களை முடக்கிய TRAI

image

SPAM அழைப்புகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் 2.75 லட்சம் தொலைபேசி எண்களை முடக்க, நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 7.9 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும், பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் விளம்பர அழைப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.

News September 3, 2024

BREAKING: அறிவித்தது TNPSC

image

குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

News September 3, 2024

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

டாஸ்மாக் கடைகளிலும் பில்லிங் மிஷின் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இனி எந்த கடைகளிலும் கூடுதலாக பணம் வாங்க முடியாது என்றார்.

News September 3, 2024

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய வங்கதேசம்

image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேச அணி 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றதன் மூலம் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது. புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலும்,2. AUS,3.NZ,5.ENG,6-SA 7-SL, 8-PAK 9-WI

News September 3, 2024

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை

image

உலகில் சில நாடுகளில் உள்ள வித்தியாசமான சட்டங்களை தெரிந்துகொள்வோம். ஆஸ்திரேலியா அருகில் உள்ள சமோவா தீவில் மனைவியின் பிறந்த நாளை மறந்தால் அபராதம்/சிறை தண்டனையாம்.
ஸ்காட்லாண்டில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எந்த வீட்டு கதவைத் தட்டி வேண்டுமானாலும் கழிவறையைப் பயன்படுத்தலாம். பொதுவெளியில் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். உங்களுக்கு தெரிந்த வித்தியாசமான சட்டங்களை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!