news

News September 3, 2024

தமிழக வீராங்கனைகளை வாழ்த்திய உதயநிதி

image

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோர் பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில் அவர்களை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து தனது x பக்கத்தில், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மேலும் பல பாராட்டுகளை அவர்கள் பெற்றுத் தர வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

திமுகவில் இணைந்த பாஜகவினர்

image

அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் பாஜகவினர் திமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோளிங்கர் கிழக்கு ஒன்றி பாஜக செயலாளர் சிவக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டையை அமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News September 3, 2024

தமிழ்நாட்டு நலனே முக்கியம்: செல்வப்பெருந்தகை

image

அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு சொல்கிறது, அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம், அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது. காவேரி மேலாண்மை வாரியம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை கொடுக்க வேண்டும் என்றார்.

News September 3, 2024

உண்மையில்லை: நிவின் பாலி

image

பாலியல் புகார் அளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக படவாய்ப்பு தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வைத்து தனக்கு நிவின் பாலி பாலியல் தொல்லை தந்ததாக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.

News September 3, 2024

WHITE-BALL அணியின் பயிற்சியாளரானார் மெக்கலம்

image

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இங்கி. டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரின் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 378 ரன் இலக்கை எட்டி வரலாற்று சாதனை படைத்தது இருந்து. இவரின் அதிரடியான அணுகுமுறை தொடருமா என்பதை கமெண்டல செல்லுங்க

News September 3, 2024

அதிரடி ஆஃபர் தந்த BSNL

image

BSNL வேறு எந்த டெலிகாம் நிறுவனம் வழங்காத அதிரடி ஆஃபரை வழங்கியுள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் நீங்கள் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பை பெற முடியும். ₹2,999 ரீசார்ஜ் செய்யும் வகையில் அமைந்துள்ள இத்திட்டம் 356 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 3 ஜிபி டேட்டாவை 3 மாதங்களுக்கு வழங்கும் நிலையில், BSNL ஒரு வருடம் வழங்குகிறது.

News September 3, 2024

புதிய உறுப்பினரை நியமித்த BCCI

image

அஜித் அகர்கர் தலைமையிலான ஆண்கள் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ராத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக இருந்த சலீல் அன்கோலாவுக்கு பதிலாக அஜய் ராத்ரா குழுவில் இடம் பெறுவார்.

News September 3, 2024

சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை புகார்

image

பிரபல பாடகி சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். ரீமா கல்லிங்கல் இளம்பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக சுசித்ரா குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி எந்த நிகழ்வும் நடந்தது இல்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

News September 3, 2024

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் செப்.5ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான இடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்காது என்பதால், நாளை ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளவும்.

News September 3, 2024

கோட் படத்திற்கு டப்பிங் பேசிய பத்ரிநாத்

image

நடிகர் விஜய்யின் கோட் படத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் டப்பிங் பேசியுள்ளார். இதுகுறித்து அவர், முதன்முறையாக ஒரு படத்திற்கு டப்பிங் பேசியுள்ளதாகவும், ‘கோட்’ படத்திற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தல தோனி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரின் டப்பிங் அதை உறுதி செய்துள்ளது.

error: Content is protected !!