news

News September 4, 2024

பூண்டு விலை கிடுகிடுவென உயர்வு

image

சென்னையில், சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை ₹70 முதல் ₹80 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹300க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது ₹380க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் பூண்டு விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு வாரத்தில் கிலோவுக்கு ₹100 வரை விலை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தினசரி உணவில் பூண்டை மறக்க வேண்டியதுதான், என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News September 4, 2024

16 ரயில்கள் ரெடி… ஓட்ட வழித்தடம் இல்ல…

image

சிக்னல் பிரச்னை, வழித்தட பற்றாக்குறை ஆகிய காரணங்களால், 16 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 54 ரயில்கள் இயக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் சிட்டிங் கோச் என்பதால், இவற்றை நீண்ட தூரம் இயக்க முடியாது. மேலும், இந்த ரயிலை பராமரிக்க 6 மணி நேரம் தேவைப்படும் என்கிறார்கள். இந்த நிலையில், மாதம் 2 புதிய ரயில்கள் தயாராகி வருகின்றன.

News September 4, 2024

நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடரட்டும்: CM

image

3ஆவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மாரியப்பன் 2016இல் தங்கம், 2020இல் வெள்ளி, 2024இல் வெண்கலம் என தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

News September 4, 2024

நான்தான் ஹென்றி, எனக்கு 10,000 குழந்தைகள்

image

தென்னாப்பிரிக்காவின் ஸ்காட்பர்க்கில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வசிக்கும் ஹென்றி, உலகின் வயதான (123) முதலை என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. குழந்தையை கொன்ற இந்த கொடூர முதலையை வேட்டைக்காரர் ஹென்றி பிடித்து கொடுத்ததால் அவரது பெயரே சூட்டப்பட்டது. 700 கிலோ எடையுடன், 16 அடி நீளமுள்ள இந்த முதலைக்கு, 6 மனைவிகள் மற்றும் 10,000 குழந்தைகள் இருப்பதாக மிருக காட்சியின் தரவுகள் கூறுகின்றன.

News September 4, 2024

LAW காலேஜ்: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

image

அரசு சட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், இந்த அவகாசம் வரும் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சட்டக் கல்வி பயில விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்க.

News September 4, 2024

1 கோடி, 2 கோடி இல்லை, 520 கோடி.. உதயநிதி பெருமிதம்

image

அரசு பேருந்துகளில் பெண்கள் 520 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவசப் பட்டாக்களை வழங்கி அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் அரசின் திட்டத்தால் பெண்கள் பெரும் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டார். நீங்கள் இலவச பயணம் செய்துள்ளீர்களா ?

News September 4, 2024

பிரபல வில்லன் நடிகர் மோகன் நடராஜன் காலமானார்

image

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும், வில்லன் நடிகருமான மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்துள்ளார். கிழக்குகரை, மகாநதி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News September 4, 2024

தீவிரவாதிகளுக்கு இந்து பெயர் – இதுதான் உண்மையா?

image

கந்தஹார் விமானக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான IC 814 வெப் சீரியஸில் தீவிரவாதிகளுக்கு இந்து பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையானது. இதுதொடர்பாக NETFLIX அதிகாரி வருத்தமும் தெரிவித்தார். ஆனால், விமானக் கடத்தலின் போது, நிஜ தீவிரவாதிகளுக்கு போலா, சங்கர் என்ற Codename-ம், மற்ற 3 தீவிரவாதிகளுக்கு Chief, Doctor, Burgar என்ற Codename-ம் இருந்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News September 4, 2024

OLED, LCD திரையில் வித்தியாசம் என்ன?

image

OLED திரைகள் LCD திரையை காட்டிலும் அதிக வாழ்நாள் உழைக்கும். இதற்கு குறைவான Maintenance போதுமானது. அதிக செயல்திறன் கொண்டிருக்கும். அதிக வெப்பத்தை வெளியிடாது. LCD திரைகளோடு ஒப்பிடும்போது நிறங்களை சிறப்பாக வேறுபடுத்தி காட்டுகிறது. அதே நேரம், LCDஐ விட விலை உயர்ந்தது. மேலும், இதன் இயக்கத்திற்கு அதிகமான Power தேவைப்படுகிறது. Apple அதன் ஐபோன்களில் இனி OLED திரைகளை பொருத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 4, 2024

ஸ்மார்ட் மீட்டர்: தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

image

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவில்லை எனில், மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது என தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்திற்காக மத்திய அரசு ₹6,360 கோடி கடன் வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்குள் இப்பணிகளை முடித்துவிட்டால், மத்திய அரசின் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அக்கடன் மானியமாகி விடும். இல்லையெனில் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.

error: Content is protected !!