news

News April 15, 2025

3 நாள்கள் தொடர் விடுமுறை

image

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியிலும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

News April 15, 2025

குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்னையா?

image

மகாராஷ்டிராவில் பிறந்ததில் இருந்தே மலம் கழிக்க முடியாத 2 வயது சிறுவனுக்கு, அரிய சர்ஜரி செய்து டாக்டர்கள் குணமாக்கியுள்ளனர். Hirschsprung நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மோசமாகவே, Per-rectal Endoscopic Myotomy (PREM) எனும் சர்ஜரியை டாக்டர்கள் செய்துள்ளனர். இது மலக்குடல் வழியாக கேமரா, கருவிகளை உட்செலுத்தி செய்யப்படுவதாகும். உலகளவில் 13 முறை மட்டுமே இந்த சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

News April 15, 2025

அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

image

ஹிமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பிராந்தியத்தில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?

News April 15, 2025

கிரிக்கெட் பேட் அளவு எவ்வளவு இருக்கலாம்?

image

டி20 போட்டிகளில் கூட 200க்கு மேல் ரன்கள் அடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட சூழலில் கிரிக்கெட் பேட்களை அவ்வபோது சோதிப்பது அவசியமாகிறது. ஆகையால்தான், மைதானத்திலேயே பேட்டை சோதிக்கும் முறையை BCCI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பேட்டின் அகலம் அதிகபட்சம் 10.8 செமீ, நீளம் அதிகபட்சம் 96.5 செமீ, ஆழம் அதிகபட்சம் 6.7 செமீ, பக்கங்கள் அதிகபட்சம் 4 செமீ மட்டுமே இருக்கலாம்.

News April 15, 2025

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

image

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். ​​சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கலாம். கற்கள் உண்டாகும். எனவே, இனிமேல் அடக்கும்முன் கொஞ்சம் யோசிச்சிக்கோங்க!

News April 15, 2025

தங்கையின் இழப்பை நினைத்து உருகிய சிம்ரன்

image

சிம்ரனின் தங்கை மோனலின் 23-வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிம்ரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த 23 வருடங்களில் தங்கையை நினைக்காத நாளே இல்லை எனவும், மோனல் மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பத்ரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த மோனல், கடந்த 2002-ம் ஆண்டு தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

News April 15, 2025

மாநில சுயாட்சியை ஏற்க முடியாது: நயினார்

image

மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாதத்துடன் திமுக அரசு செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை எனவும், தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என CM ஸ்டாலின் நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சியை ஏற்க முடியாது எனவும், இந்தியா வல்லரசாக இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

IPL: PBKS அணி ஆல் – அவுட்

image

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், PBKS அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த PBKS அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். KKR அணியின் ஹர்ஷித் ராணா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். KKR அணி 112 என்ற எளிய இலக்குடன் களம் இறங்கவுள்ளது.

News April 15, 2025

நிறை மாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்ட நடிகை

image

சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன், தனது முதலாம் ஆண்டு திருமண தினத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார். நீதானே என் பொன் வசந்தம், கனா, கண்ட நாள் முதல் ஆகிய சீரியல்களில் நடித்த தர்ஷனா, கடந்த ஆண்டு இதே நாளில் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை அவர் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

News April 15, 2025

தமிழ்நாட்டுல இவளோ பேருக்கு எய்ட்ஸ் இருக்கா!

image

தமிழகத்தில் 1,57,908 பேருக்கு HIV தொற்று (எய்ட்ஸ்) இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 25,000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். HIV தொற்று, பாலியல் உறவின் மூலம் மட்டுமே அதிகம் பரவுவதால், காண்டம் அணிவது போன்ற பாதுகாப்பான பாலியல் உறவை தேர்ந்தெடுங்கள். HIV தொற்றை குறைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

error: Content is protected !!