India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக 2025 ஆண்டு ஐபிஎல் தொடருக்கான RR பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு செல்போன் பார்க்காத குழந்தைகளே இல்லை எனக் கூறலாம். குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் ஆக்ரோஷம், மனச்சோர்வு, தூக்கமின்மை ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டிவி பார்க்க ஸ்வீடன் தடை விதித்துள்ளது. 2 முதல் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நாளொன்றுக்கு 1 மணிநேரம் மட்டுமே செல்போன் பார்க்க ஸ்வீடன் அரசு உத்தரவிட்டுள்ளது.
ED கைதுக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த வருடம் ஜூன் 14ஆம் தேதி, அவரை ED கைது செய்தது. கைதுக்கு எதிராக செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனிடையே, அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கியதால், மனுவை திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறியதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாலிவுட் நட்சத்திர நாயகன் சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது தெரிந்ததே. உலகளவில் $150 மில்லியன் வசூலித்த இந்த படத்தின் இயக்குநர் கபீர்கான், கதையின் நாயகனாக ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்பியுள்ளார். ஏற்கெனவே லிங்கா, கபாலி ஆகிய இரு படங்களில் ரஜினி கமிட்டாகி இருந்ததால், அவரால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
செபி தலைவர் மாதபி புரி மீது 500க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்கள் நிதி அமைச்சகத்திடம் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலந்தாய்வுக் கூட்டங்களில், தலைமைத்துவ பண்பின்றி, பணியாளர்களை அலட்சியப்படுவது, அனைவர் முன்பும் திட்டுவது, இழிசொற்களால் அவமதிப்பது போன்ற மோசமான பாணியை அவர் பின்பற்றுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், இதனால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகக் கூறியுள்ளனர்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்சில் ஆண்களுக்கான F46 குண்டு எறிதலில் சச்சின் கிளாரி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 16.32மீ தூரம் குண்டு எறிந்து இரண்டாவது இடம்பிடித்து பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பதக்கப்பட்டியலில் 19ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, தங்கம் 3, வெள்ளி 8, வெண்கலம் 10 என மொத்தம் 21 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இது முந்தைய டோக்கியோ ஒலிம்பிக்ஸை காட்டிலும் அதிகமாகும்.
தென் கொரியாவில் அதிகரித்து வரும் deepfake பாலியல் குற்றங்கள் அந்நாட்டிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள், ஆசிரியைகள், ராணுவத்தினரை குறிவைத்து அவர்களின் பாலியல் படங்கள் அதிகளவில் பரப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணையில், Telegram செயலி மூலம் இவை அதிகளவில் பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. Telegram நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவில் டெங்கு வேகம் எடுப்பதால் அது தமிழகத்திற்கும் பரவக்கூடும். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு, நல்ல தண்ணீரிலேயே பெருகுகிறது. எனவே,வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் விதமான சிரட்டை, டயர்கள், பாத்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசு அதிகம் சேரும் பகுதிகளில் மருந்து அடிப்பது நல்லது. வீட்டுக்கு அருகே தேங்கியுள்ள நீரில் ப்ளீச்சிங் பவுடரை போட வேண்டும். ஜன்னல்களில் கொசு வலை அடிப்பதும் சிறந்தது.
விஜய்யின் ‘பிகில்’ படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கில், இயக்குநர் அட்லி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிகில் படம் தனது கதை என அம்ஜத் என்பவர் 2019ல் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதில் தர உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கடலோர ஆந்திரா, அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.