news

News September 4, 2024

மூலிகை: டிப்ரஷனில் இருந்து மீட்கும் நீர்ப்பிரமி

image

வயோதிகத்தால் நலிவுற்றவர்களையும் மனதளவில் சோர்வுற்றவர்களையும் தேற்றும் ஆற்றல் நீர்ப்பிரமிக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. பகோபாசைட்ஸ், பிரமைன், ஹெர்பெஸ்டைன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலையை பொடி செய்து, அதனுடன் அமுக்கராப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து 48 நாட்கள் பருகிவந்தால், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News September 4, 2024

விஜய் ரசிகர்களுக்கு குட்டி ட்ரீட்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் கொடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் குறித்த ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட உள்ளது. இந்த தகவலால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். யாரெல்லாம் இப்படத்தை தியேட்டரில் பார்க்க உள்ளீர்கள்?

News September 4, 2024

அமலானது ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்!

image

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒப்புதல் அளித்துள்ளார். பழைய ஓய்வூதியம், தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு மாற்றாக, இந்த ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 78 லட்சம் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். நாட்டின் எந்த மூலையிலும், எந்தவொரு வங்கியிலும் பென்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.

News September 4, 2024

வயநாடு மக்களுக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ராகுல்

image

வயநாடு நிவாரண பணிகளுக்காக ஒரு மாத எம்.பி ஊதியத்தை ராகுல் காந்தி வழங்கி உள்ளார். இது தொடர்பாக xஇல் பதிவிட்டுள்ள அவர், “வயநாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் ஒரு பேரழிவு தரும் சோகத்தை அனுபவித்திருக்கிறார்கள், அவர்கள் எதிர்கொண்ட கற்பனைக்கு எட்டாத இழப்புகளில் இருந்து மீள, நமது ஆதரவு தேவை” என குறிப்பிட்டுள்ளார். தனது ஒரு மாத ஊதியம் ரூ 2.3 லட்சத்தை நிவாரணமாக அவர் வழங்கியுள்ளார்.

News September 4, 2024

கேட்டது நல்ல காஃபி… கொடுத்தது ₹10,000 இழப்பீடு

image

சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் கேன்டீனில் ₹160க்கு காஃபி வாங்கிய வாடிக்கையாளருக்கு ₹10,000 இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேன்டீனில் வாங்கிய காஃபி கெட்டுப்போனதால், மாற்றித் தரும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால், மாற்றித் தர மறுத்ததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுபோன்ற சேவை குறைபாட்டை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 4, 2024

“G.O.A.T ” சிறப்பு காட்சிக்கு அனுமதி

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “G.O.A.T” திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. செப்.5,6 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகளை திரையிடலாம். ஆனால், நள்ளிரவு 2 மணிக்குள் கடைசி காட்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News September 4, 2024

ரிலீசுக்கு முன்பே இந்தியன்-2 சாதனையை முறியடித்த ‘G.O.A.T’

image

விஜய் நடிப்பில் ₹400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘G.O.A.T’ படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்பே இப்படம், இந்தியன்-2 படத்தின் ரெக்கார்டை முறியடித்துள்ளது. அதாவது இப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு ₹16.85 கோடி வரை வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், இந்தியன்-2 படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவு ₹11.2 கோடி என தெரிகிறது.

News September 4, 2024

சர்ச்சை: பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்க உத்தரவு

image

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அரசு பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பெரம்பலூர், புதுக்கோட்டை ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம். பிளாஸ்டிக் தட்டுகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் உள்ளிட்ட 10 உறுதிமொழிகளை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், இதுபோன்ற உறுதிமொழி அறிக்கை வெளியானது இல்லை. 2 மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 4, 2024

General Knowledge: கேள்விகளுக்கு பதில்

image

இன்று 12 மணிக்கு General Knowledge இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1. பொசைடன் 2. பாரிஸ் ஒப்பந்தம் (Treaty of Paris) 3. ரோஜா பூ 4. ஏஞ்சலினா மெர்க்கெல். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 4, 2024

RR தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்

image

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக 2025 ஆண்டு ஐபிஎல் தொடருக்கான RR பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!