news

News September 4, 2024

அஜித்துடன் விஜய்.. செம வைரல் போட்டோ

image

விஜய்யுடன் நடிகர் அஜித் பைக்கில் அமர்ந்திருப்பது போல், எடிட் செய்து தரும் AI இணையதளத்தை ‘GOAT’ பட தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதேபோன்று, விஜய்யுடன் நீங்கள் இருப்பது போன்ற புகைப்படம் வேண்டுமா?. https://agsentertainment.heyareweare.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளலாம். தற்போது விஜய் ரசிகர்கள் பலர் AI போட்டோவை மாற்றி வருகின்றனர்.

News September 4, 2024

பயங்கரவாதிகள் தாக்குதலில் 81 பேர் பலி

image

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய ஆயுதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

News September 4, 2024

67 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

image

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் அக்.1இல் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-காங்கிரஸ் இடையே அங்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 2 கட்சிகளும் தலா 5 தொகுதிகளில் வென்றது. தற்போது அங்கு நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

News September 4, 2024

BREAKING: செப்.17ஆம் தேதி பொதுவிடுமுறை

image

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான “மிலாது நபி” செப்.17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இன்று மாலை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை. இதனால், செப்.6ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, 17ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படும் என்பதால், அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

தொல்லியல் துறையின் இயக்குநராகும் அமர்நாத்

image

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவர்தான், உலகத்தின் கவனத்தை ஈர்த்த கீழடி அகழாய்வின் மூலம் தொல்தமிழரின் (5,000 ஆண்டுகள் பழமையான) நகர நாகரிகத்தை வெளியுலகிற்கு முதன்முதலில் எடுத்துக்கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 4, 2024

விடியா திமுக அரசால் சீரழியும் மாணவர்கள்: EPS

image

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறியதால், தமிழக மாணவர்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, மன அழுத்தத்தில் தவறான முடிவெடுத்தது வேதனை அளிப்பதாகக் கூறிய அவர், இனியாவது விடியா திமுக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து, போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News September 4, 2024

BREAKING: பள்ளி மாணவர்களே இதை செய்ய வேண்டாம்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு <<14019884>>பள்ளிகளில் <<>>உறுதிமொழி எடுக்க வேண்டும் என வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. “பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டாம். தவறான சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும்” என்றும் எச்சரித்துள்ளது.

News September 4, 2024

விரைவில் கண்ணாடி பாலம் பயன்பாட்டிற்கு வரும்: எ.வ.வேலு

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை நேரில் ஆய்வுசெய்தபின் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘இருபுறத்திலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, விரைவில் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

இவர்கள் PBKS அணியிலிருந்து விடுவிக்கப்படலாம்?

image

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்பாக மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் அணியில் தக்கவைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் அணி மூன்று வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் விடுவிக்கப்படலாம் என்றும், அர்ஸ்தீப் சிங் தக்கவைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

News September 4, 2024

The GOAT- தமிழில் எப்படி சொல்லணும் தெரியுமா?

image

தமிழ் திரைப்படங்களுக்கு தூயத் தமிழில் தலைப்பு (TITLE) வைக்க வேண்டுமென தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யின் ‘The GOAT’ படத்தை தமிழில் எப்படி அழைக்க வேண்டுமென கவிஞர் மகுடேசுவரன் கூறியுள்ளார். The Greatest of All Time என்பதை ‘எஞ்ஞான்றும் மாப்பெரிது’ (எப்பொழுதும் மிகப் பெரியவன்) என அழைக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!