news

News August 10, 2024

சாப்பிடும் முன்பு யோகா பயிற்சி செய்யலாமா?

image

யோகா பயிற்சியை சாப்பிடும் முன்பு மேற்கொள்ளலாமா எனப் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதுகுறித்து யோகா ஆசிரியர்கள் தெரிவிப்பதை காணலாம். அனைவரும் அதிகாலை எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொண்டு 2 மணி நேரத்திற்கு பிறகே மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

News August 10, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (11.08.2024)

image

மேஷம் – உயர்வு, ரிஷபம் – சினம், மிதுனம் – அன்பு, கடகம் – போட்டி, சிம்மம் – ஜெயம், கன்னி – நன்மை, துலாம் – பகை, விருச்சிகம் – இன்பம், தனுசு – திடம், மகரம் – பெருமை, கும்பம் – மகிழ்ச்சி, மீனம் – விவேகம்

News August 10, 2024

சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவது ஏன்?

image

சாப்பிட்டதும் வயிறு உப்புசம் பிரச்னை ஏன் வருகிறது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ராஜ்மா, கொண்டைக்கடலை மாதிரியான கடலைகள், பால் போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் உப்புசம் அதிகமிருக்கும், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் வரக்கூடும் என தெரிவிக்கின்றனர். எனவே உணவு முறையை மாற்றி தீர்வு காண பரிந்துரைக்கின்றனர்.

News August 10, 2024

இப்படி ஒரு போட்டி இருப்பதே எனக்கு தெரியாது: சாய்னா

image

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் வரை ஈட்டி எறிதல் என்ற ஒரு போட்டி இருப்பதே தனக்கு தெரியாது என பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2024

ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்

image

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ஆப்பிள்களை கடித்தல், குவளைகளில் பந்துகளை போடுதல், வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உதைத்தல் உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் இதுவரை சுமார் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

News August 10, 2024

‘கங்குவா’ டிரெய்லர் நாளை மறுநாள் வெளியீடு

image

‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம், அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. உலகம் முழுவதும் 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

News August 10, 2024

வினேஷ் போகத் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

image

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சமரச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் அரையிறுதியில் வென்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியின் போது 50 கிலோவை விட கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வெள்ளிப்பதக்கம் கோரியும் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

News August 10, 2024

TNPSC, SSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

image

அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆக.12 முதல் 16 வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இத்தேர்வுகளுக்கான மேன்படாக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

News August 10, 2024

‘பிக்பாஸ் 8’ சீசனை தொகுத்து வழங்கப்போவது இவரா?

image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 8ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் 8ஆவது சீசனில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால், 8ஆவது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

News August 10, 2024

solar power: சாதனை படைத்த தமிழகம்

image

சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. 09.08.2024 அன்று 5979 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5704 MW ஐ (02.08.2024) விஞ்சியுள்ளது. மேலும், 41.40 MU மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மையை உறுதிப்படுத்துகிறது என்று மின்வாரியம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!