India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், பண்டிகை தினங்களில் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, கூடுதல் டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்.
விஜய் படம் ரிலீஸ் என்றாலே கலகலப்பு, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சில நேரங்களில் விஜய் – அஜித் மோதும் சம்பவங்களும் நடக்கும். ஆனால், இப்போது சற்று வித்தியாசமாக விஜய் ரசிகர்களுக்கும், விஜய்யின் தவெக நிர்வாகிகளுக்கும் நடுவிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தில் GOAT திரைப்படம் பார்க்கும் போது, விஜய் ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் திடீரென இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்டனர்.
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ₹2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து நைக் நிறுவனத்துடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. Optum நிறுவனம் அதன் தொழிலை திருச்சி, மதுரையில் தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
தெலங்கானாவில் காவல்துறையினருடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்ராத்ரி கோதாகுடம் மாவட்டம், காராகுரம் மண்டலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 போலீசார் பலத்த காயமடைந்ததாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் இன்று வெளியான GOAT படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு சர்ப்ரைஸ்களை இயக்குநர் வெங்கட் பிரபு வைத்துள்ளார். அதாவது, மறைந்த விஜயகாந்தை AI மூலம் உருவாக்கி நடிக்க வைத்துள்ளார். அத்துடன் சிவகார்த்திகேயன், திரிஷா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தாேனி ஆகியோரையும் நடிக்க வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
FY2023-24இல் கோலி ₹66 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். கிரிக்கெட் பிரபலங்களில் அதிக IT கட்டியவர்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. இதில் சச்சின், தோனி ஆகியோரின் கூட்டு மதிப்புக்கு இணையாக கோலி வரி செலுத்தியுள்ளார். அதாவது, தோனி ₹38 கோடியும், சச்சின் ₹28 கோடியும் IT கட்டியுள்ளனர். கங்குலி ₹23 கோடி, ஹர்திக் பாண்டியா ₹12 கோடி, ரிஷப் பண்ட் ₹10 கோடி IT கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறு வயது முதலே பாலியல் சீண்டலை எதிர்கொண்டு உள்ளதாக சிம்ரன் வேதனை தெரிவித்துள்ளார். நடிகைகள் தெரிவிக்கும் புகார்கள் குறித்த தனது கருத்துகளை சிம்ரன் வெளியிட்டுள்ளார். அப்போது அவர், தாமும் சீண்டல்களை எதிர்கொண்டு உள்ளதாகவும், தற்போது அதுகுறித்த தகவலை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய பிரச்னைகளை எதிர்த்து போராட வேண்டும், அமைதி காக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. அதன்படி, விழுப்புரம், தி.மலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறக்க முடிவு செய்துள்ளது. விழுப்புரம் – நங்கிளிகொண்டான், தி.மலை – கரியமங்கலம், கிருஷ்ணகிரி – நாகம்பட்டியில் புதிய சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெகவிற்கான அங்கீகாரத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தேர்தல் ஆணையம் தான் அதனை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அரசியலுக்கு புதியவர் என்பதால் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக விளக்கமளித்தார். புதிய தம்பிக்கு கொடுத்த ஆதரவு என்பது கூட்டணிக்கான அழைப்பு அல்ல என்றும் மறுப்பு தெரிவித்தார். முன்னதாக, விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுவதாக அவர் விமர்சித்திருந்தார்.
நமது முன்னேற்றத்தை கண்டு ஒருவர் மகிழ்கிறார் என்றால், ஒன்று நம் பெற்றோராக இருக்க வேண்டும் அல்லது ஆசிரியராக இருக்க வேண்டும். பெற்றோருக்காவது சுயநலம் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள்? தோளில் தூக்கி வளர்த்தவர் தந்தை என்றால், தோளை தட்டி உலகை காட்டியவர் ஆசிரியர். “என்ன பாத்தாலே ஓடுவ.. இன்னைக்கு நீ பெரிய டாக்டரா டா” என அதட்டி பெருமைப்படும் ஜீவன்களான டீச்சர்கள் டார்ச்சர் அல்ல. டார்ச்பேரர்கள்.
Sorry, no posts matched your criteria.