India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் மாநாடு நடத்தி, அவரது கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் அனுமதி பெற முடியும் போது, விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்னை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக உடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க.
ஈடன்பர்க்கில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியிலேயே ஆஸ்திரேலியா மிரட்டியுள்ளது. ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் விளையாடி கஷ்டப்பட்டு 154 ரன்கள் எடுத்த நிலையில், அதை 9 ஓவர்களிலேயே அசால்ட்டாக சேஸ் செய்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதில் Power Play ஆன முதல் 6 ஓவரிலேயே 113 ரன்களை எடுத்து, தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்தது ஆஸ்திரேலியா. அதிலும் ட்ராவிஸ் ஹெட், 25 பந்துகளில் 80 ரன்களை குவித்தார்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன Digital Dementia? செல்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு தான் அது. நினைவாற்றல் இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறுவார்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
IT நடைமுறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களில் IT செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம் எனக் கூறிய அவர், சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதனிடையே, பொருட்களுக்கான GSTஐ கடந்த 5 ஆண்டுகளில் 1% கூட உயர்த்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
விஜய்யின் GOAT திரைப்பட தலைப்பில் சனாதனம் தெரிவதாக விசிக எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்து இல்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதானே சனாதனத்தின் பொருள். இது தெரிந்துதான் விஜய் படத்துக்கு தலைப்பு வைத்தார்களா?” எனக் கேள்வியெழுப்பினார்.
எதிர்பாராத சூழ்நிலையில் எதிரிகளாக மாறும் தந்தையும், மகனும் பற்றிய கதைதான் ‘GOAT’. இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், யுவனின் BGM அட்டகாசம். சண்டை காட்சிகள் சலிப்பு தர, படத்தின் நீளம் சற்று மைனஸாக உள்ளது. எனினும் தனது ஆஸ்தான ஸ்டைலில் காமெடி, ஆக்ஷன் என சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் வலு சேர்த்திருக்கிறார் வெங்கட்பிரபு. Way2News Rating 3/5.
அயோத்திக்கும், தமிழகத்திற்கும் இடையே சிறப்பு பிணைப்பு இருப்பதாக உ.பி. CM யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிேஷக விழாவில் பேசிய அவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இலங்கை செல்லும் வழியில் ராமேஸ்வரத்தில் வழிபாடு நடத்தியதாகவும், அதேபோல் இலங்கையில் இருந்து நாடு திரும்பியபோது சீதாதேவியும் அங்கு வழிபாடு நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மாநாடு நடத்த உரிய முறையில் அனுமதி கேட்டால், அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, பாஜக தரப்பில் தமிழிசை, நாதக தரப்பில் சீமான், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் என பலர் ஆதரவு குரல் தெரிவித்து வருகின்றனர். திமுக தரப்போ மவுனம் காத்து வருகிறது.
இந்தியாவிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழகத்தில் இருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். CBSE பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது State Board பாடத்திட்டத்தில் தரமில்லை என கவர்னர் கூறியிருந்தார். இது குறித்து பேசிய உதயநிதி, உலகின் தலைச்சிறந்த மருத்துவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்றார். மேலும், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் State Boardஇல் படித்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.