news

News September 6, 2024

நீங்க போங்க… நான் பாத்துக்குறேன்

image

‘G.O.A.T’ படத்தில் SK வரும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக, அவரது வசனம் Code Wordஆக இருக்குமோ? என ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர். “நீங்க இதைவிட ஏதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்” என விஜய்யிடம் SK கூறுகிறார். விஜய் அரசியலுக்கு செல்லும் சூழலில், சினிமாவில் அவரது இடத்தை SKவிடம் வழங்குவதாக ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

News September 6, 2024

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

அரசு அனுமதி இல்லாமல் பள்ளிகளில் இனி எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சொற்பொழிவாளர் <<14033728>>சர்ச்சைக்குரிய<<>> வகையில் பேசிய நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பறந்துள்ளது.

News September 6, 2024

தெற்கு ரயில்வேயில் வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

தெற்கு ரயில்வேயில் பாரா மெடிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நர்ஸிங் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட், பிசியாேதெரபிஸ்ட் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 143 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளோர் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News September 6, 2024

பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் கிராமம்

image

மகாராஷ்டிராவில் உள்ள ஷெட்பாலில் பாம்புகளை செல்லப்பிராணிகளாக அந்த ஊர் மக்கள் வளர்த்து வருகின்றனர். அதிலும், நாகப்பாம்புகளே பெரும்பாலானோரின் செல்லப்பிராணியாக உள்ளது. சிவனின் வெளிப்பாடாக கருதுவதால், பாம்புகளை மிகவும் கண்ணியத்துடன் ஊர் மக்கள் நடத்துகின்றனர். தனி வழிபாடுகளும், சடங்குகளும் கடைபிடிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பாம்புகள் இருக்கும் போது, ஒருவர் கூட பாம்பு கடித்து உயிரிழக்கவில்லை.

News September 6, 2024

என்னிடம் யாரும் சீண்டலில் ஈடுபட்டதில்லை: ப்ரியாமணி

image

தன்னிடம் யாரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதில்லை என்று நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார். மலையாள நடிகைகள் அடுத்தடுத்து தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு அதுபோல கசப்பான அனுபவம் ஏற்பட்டதில்லை, யாரும் தன்னிடம் பாதிக்கப்பட்ட கதையை சொன்னதில்லை என்றும், மலையாளத்தை போல பிற மொழிகளிலும் கமிட்டி அமைத்தால் நல்லதென்றும் தெரிவித்தார்.

News September 6, 2024

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

image

முகூர்த்த நாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு செய்யப்படும் என்பதால், மக்களின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

குரலுக்கும் இனிமே Copyright?

image

கொரோனா பேரிடருக்கு பிறகு, யூடியூப் பலருக்கும் வாழ்வாதாரமாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இந்த சூழலில், படைப்பாளிகளின் Content திருடப்படுவதை தடுக்க யூடியூப் பல்வேறு அம்சங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், AI டெக்னாலஜி மூலம் மற்றொருவரின் குரலை நகலெடுப்பதற்கான கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News September 6, 2024

TN நீதிமன்றங்களில் 16 லட்சம் வழக்குகள் தேக்கம்

image

தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் 16 லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. RTI சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மேலும், கிரிமினல் வழக்குகளை விட, சிவில் வழக்குகளே அதிகம் தேக்கமடைந்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. வழக்குகள் அதிகரிக்கும் நிலையில், போதிய நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News September 6, 2024

புத்திரதோஷம் தீர்க்கும் காசி விஸ்வநாதர்

image

புதுக்கோட்டை அருகே சின்னையா சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்டால் புத்திரதோஷம் தீரும் என்பது ஐதீகம். குழந்தைபேறு இல்லாதவர்கள் காசி யாத்திரை சென்று, 3 நாள்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியைத் தரிசித்தால் தோஷம் நீங்கும். ஆனால், அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர். Share it.

News September 6, 2024

Credit கார்டு நிறுவனத்தை நீங்களே தேர்வு செய்யலாம்

image

நாடு முழுவதும் விருப்ப அடிப்படையில், Credit கார்டு வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி, Master, Rupay, Visa என எந்த நிறுவன Credit கார்டையும் விண்ணப்பிக்கும்போதே தேர்வு செய்யலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே Credit கார்டு வைத்திருப்போரும் அதனை புதுப்பிக்கும்போது நிறுவனத்தை மாற்றிக்கொள்ளலாம்.

error: Content is protected !!