news

News September 6, 2024

கர்நாடகா: கொரோனா நிதியில் ₹1,000 கோடி முறைகேடு?

image

கர்நாடகாவில் கொரோனா நிதியில் ₹1,000 கோடி முறைகேடு செய்ததாக முந்தைய பாஜக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடியூரப்பா அரசின் ஆட்சியில் ₹13,000 கோடி செலவு என கூறப்பட்டுள்ளதெனவும், அதுதொடர்பான கோப்புகளைக் காணவில்லை எனவும் விசாரணை கமிட்டி இடைக்கால அறிக்கை அளித்துள்ளது. காங்கிரஸ் மீதான முத்தா ஊழல் புகாரைத் தொடர்ந்து, பாஜக மீது எழுந்த இந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 6, 2024

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆணைக்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மறுவிசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

News September 6, 2024

Resign_AnbilMahesh ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

image

<<14033728>>அசோக் நகர்<<>> பள்ளி சர்ச்சையைத் தொடர்ந்து ‘Resign_AnbilMahesh’ என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் சூழலில், அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டுமென நெட்டீசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் இருக்குமா? உங்க கருத்த கமெண்ட் பண்ணுங்க.

News September 6, 2024

உயரமான இடத்திற்கு போக விரும்புறீங்களா?

image

அதிக உயரத்தில் வாழ்வது ஏராளமான உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, 8,000 அடி உயரத்தை தாண்டும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவதால், ஆரம்பத்தில் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய முயற்சிக்கும். இதனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். காலப்போக்கில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும். தசைகளில் சிறிய ரத்த நாளங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

News September 6, 2024

EXIT POLL: விசாரணை கோரும் மனு தள்ளுபடி

image

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே ஊடகங்கள் வாக்கு கணிப்புகளை வெளியிட்டது குறித்து விசாரணை கோரி தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “தேர்தல் முடிந்து மத்தியில் ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆதலால், அக்காலத்தில் நடந்ததை மறந்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துவோம். இது அரசியல் சார்ந்த மனு என்பதால் தள்ளுபடி செய்கிறோம்” என்றது.

News September 6, 2024

காங்கிரஸில் இன்று இணைகிறார் வினேஷ் போகத்

image

மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்.5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணையும் அவர்கள் இருவரும், சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே, இருவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2024

எலான் மஸ்க்கின் X தளத்தை விமர்சித்த ஓலா சிஇஓ

image

எலான் மஸ்க்கின் X தளத்தை ஓலா சிஇஓ பாவிஸ் அகர்வால் விமர்சித்துள்ளார். இந்திய சட்டங்களுக்கு WIKIPEDIA கட்டுப்படவில்லை என டெல்லி ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்ததையும், பிரேசிலில் X நிறுவனத்துக்கும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மோதல் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற தளங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 6, 2024

சுனிதா இல்லாமல் பூமி திரும்பும் விண்கலம்

image

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் சுனிதா வில்லியம், பேரி வில்மோர் இல்லாமல் நாளை அதிகாலை 3.30க்கு பூமி திரும்பவுள்ளது. இந்த விண்கலத்தில் ஜூன் 5ஆம் தேதி இருவரும் ISS சென்ற நிலையில், ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவது சிக்கலானது. ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பிப். 2025இல் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர்.

News September 6, 2024

கடன் இல்லாமல் வாழ வேண்டுமா?

image

கடன் இல்லாமல் வாழ சில விதிகளை பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். *”சம்பளம் அதிகரிக்கட்டும் சேமிக்கலாம்” என சாக்குபோக்கு சொல்லாமல், வாங்கும் சம்பளத்தில் 20%ஐ சேமிக்க வேண்டும். *மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு கட்டாயம் செய்திருக்க வேண்டும். *FD, மியூச்சுவல் ஃபண்ட் SIP என ஏதாவது ஒரு முறையில் 6 மாத சம்பளத்தை அவசரகால நிதியாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும். *ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும்.

News September 6, 2024

பொது அறிவு வினா – விடை

image

1.பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 2.தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டது? 3.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 4.உலகிலேயே பத்திரிகையாளருக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்? 5.தன் வாழ்நாளில் நீரே அருந்தாத உயிரினம் எது? விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

error: Content is protected !!