India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
UPI-யில் சர்க்கிள் என்ற புது வசதியை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. UPI-யில், பிரைமரி வாடிக்கையாளர் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்தநிலையில், சர்க்கிளில் பிரைமரி வாடிக்கையாளர் தனது குடும்ப உறுப்பினர், நண்பர்களை சேர்க்கவும், அவர்களும் பணப்பரிவர்த்தனை செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அதிகபட்சமாக ₹15,000 வரை அனுப்ப முடியும்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு சக வீராங்கனை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கும் பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்ததாகவும், ஆனால் அவற்றை ஏற்கவில்லை எனவும் கூறினார். இது, பெண் நீதிக்கான தங்களது போராட்டம் மீது தவறான கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தனது போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக பேசிய அவர் மீது, தங்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய கோரிக்கை வைத்துள்ளனர். மகாவிஷ்ணு மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற நிலையில், திருப்பூரிலுள்ள அவரது அறக்கட்டளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொது அறிவு <<14034771>>வினா – விடை<<>> பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1.பிறக்கும் குழந்தைகளுக்கு 270 – 300 எலும்புகள் இருக்கும். 2.மக்ரானா 3.பூக்கள் நெதர்லாந்தில் அதிகம் உற்பத்தியாகிறது. அதில் 50%க்கு மேல் ஏற்றுமதி ஆகிறது. 4.வி.பி.சிங். இவர் 800க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 2 மணி நேரம் வரை பதில் அளித்து சாதனை படைத்தார். 5.வாழ்நாளில் நீரே அருந்தாத உயிரினம் கங்காரு எலி.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என, தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இன்று மாலை இணைந்து, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 12ம் தேதி வரை 7 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
எதிர்கால சந்ததியினர் நலனுக்காக மக்கள் நீரை சேமிக்க வேண்டுமென PM மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத்தில் ஜல் சஞ்சய் ஜல் பகிரதி திட்டத்தை தொடங்கி வைத்து காணொலி மூலம் பேசிய அவர், நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை கிடையாது, அது ஒரு அறம் என்றார். எதிர்கால சந்ததியினர் நமது வாழ்க்கை முறையை மதிப்பிட, நீர் சேமிப்பு முறையையே முதல் அளவுகோலாக எடுப்பர் என்றும் மோடி அறிவுறுத்தினார்.
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ₹5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்துள்ளனர். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என தகவல் வெளியானது. மேலும், அமெரிக்காவின் வேலை வாய்ப்பு தரவுகள் சந்தைக்கு பாசிட்டிவாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 81,159 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
தமிழகத்திற்கு உறுதி செய்யப்பட்ட ₹10 லட்சம் கோடி முதலீட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் TN இல்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில், முதலீடு குவிவதாக கூறுவதெல்லாம் வெறும் மாயை தானா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா நிதியில் ₹1,000 கோடி முறைகேடு செய்ததாக முந்தைய பாஜக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடியூரப்பா அரசின் ஆட்சியில் ₹13,000 கோடி செலவு என கூறப்பட்டுள்ளதெனவும், அதுதொடர்பான கோப்புகளைக் காணவில்லை எனவும் விசாரணை கமிட்டி இடைக்கால அறிக்கை அளித்துள்ளது. காங்கிரஸ் மீதான முத்தா ஊழல் புகாரைத் தொடர்ந்து, பாஜக மீது எழுந்த இந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.