India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டுக்கு பார்முலா 4 கார் RACE அவசியமா என ADMK மூத்த தலைவர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இம்மாத இறுதியில் பார்முலா 4 ரேஸ் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதை எதிர்த்து அதிமுக வழக்கு தொடுத்தது குறித்த கேள்விக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் கடத்தல் என பல பிரச்னை இருக்கையில் பார்முலா 4 ரேஸ் அவசியமா என கருதியே அதிமுக வழக்கு தொடுத்துள்ளது என்று பதிலளித்தார்.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடாத போது அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இதை அதிமதுரத்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, அதிமதுரம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவானது என்றும், இதை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சர் முற்றிலும் குணமாகி விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சினிமா எடுக்க விரும்புவோர் இந்த வெப் சீரிஸை மட்டும், தவற விடக்கூடாது என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார். டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “திரைப்படம் எடுக்க விரும்புவோர் ‘Breaking Bad’ வெப்சீரீஸை பார்க்க வேண்டும். திரைப்பட கல்லூரியில் கற்பதை விட அந்த வெப் சீரிஸ் பலவற்றை கற்றுத் தரும்” எனத் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகளாக தற்போது இருக்கும் பெரும்பாலானோர் ஓபிஎஸ், இபிஎஸ் இரட்டைத் தலைமையில் நியமிக்கப்பட்டவர்கள். அதில் தென்மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலர் மக்களவைத் தேர்தலில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களை வைத்துக் கொண்டு 2027 தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், உட்கட்சித் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய இபிஎஸ் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவோடு தன்னை இணைத்து பேசப்பட்டது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளார். மான்ஸ்டர், பொம்மை என தொடர்ந்து 2 படங்களில் சேர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மண்ணுக்குள் புதைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் எழுந்து வருவதாகவும், அதற்குள் இப்படி பேச ஆரம்பித்துவிட்டதாக எஸ்.ஜே.சூர்யா கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் தோற்ற மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் கொளத்தூரை சேர்ந்த அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள், கால்பந்து விளையாட்டில் தோற்றதால் அவர்கள் மீது ஆசிரியர் அண்ணாமலை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
மத்திய பிரதேசத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பெல்காம் ஏவியேஷன் என்ற தனியார் அகாடமிக்கு சொந்தமான விமானம், குணா மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த விமானிகள் காயமடைந்த நிலையில், விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விடாமுயற்சி’. சமீப காலமாக இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகிவரும் நிலையில், இன்று இரவு 7:21 மணிக்கு இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனதே தலைமை பயிற்சியாளராக தனது மோசமான நாள்கள் என டிராவிட் தெரிவித்துள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளும் சாதகமாக அமையவில்லை எனவும், சீனியர் வீரர்கள்தான் அணியை வழிநடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ரோஹித், கோலி, பும்ரா, அஸ்வின் போன்றோர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 2016 தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதேபோன்ற சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உதயநிதி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி துணை செயலாளர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.