India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று முன் தினம் இரவு ரஷ்யா அனுப்பிய 44 டிரோன்களில் 27-ஐ சுட்டுத் தள்ளியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 8 டிரோன்கள் ரேடாரில் இருந்து மாயமானதாகவும், ஒரு டிரோன் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் பறந்து சென்றதாகவும் ராணுவம் நேற்று சமூக வலைதளத்தில் கூறியுள்ளது. மீதமுள்ள டிரோன்கள் உக்ரைன் வான்பரப்பில் இருப்பதாகவும், இதைத் தவிர, ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை தொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மாக்ஸ் முல்லர் என்ற ஜெர்மானியரால், அந்நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு தனி மரியாதையும், அம்மொழியை கற்றுத்தர கல்வி நிலையங்களும் அங்கு உண்டு. இந்தியா வந்து சமஸ்கிருதம் கற்று, வேதங்களை ஆங்கிலம், ஜெர்மனில் முல்லர் மொழிபெயர்த்தார். பால கங்கார திலகர் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுதலை செய்ய விக்டோரியா மகாராணிக்கு கடிதம் எழுதியவர். இந்தியாவிலும் இவரது பெயரில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்ளன.
சென்னையில் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நிதியுதவியுடன் கடந்த 2021ல் தூய காற்று செயல்திட்டத்தை அரசு முடக்கி வைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பல தலைமுறைகளை காக்க பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டம் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதன் கீழ் நுண் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன் குமார், இந்த பதக்கத்தை தன்னுடைய குழுவுக்கும், நாட்டிற்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தருணத்திற்காக 3 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மகனின் வெற்றியை பார்த்து தங்களது கிராமமே பெருமைப்படுவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இன்று விநாயகருக்கு உகந்த நாள். பிள்ளையாரை அலங்கரித்து அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் என பலவித பலகாரங்கள் படைத்து பூஜை செய்து, குடும்பத்துடன் பலகாரங்களை உண்பதே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். இந்த விழாக்காலத்தில் விநாயகர் கோலங்கள் போட்டு வீட்டை அலங்கரிக்க நினைப்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. இங்கு வழங்கப்பட்டுள்ள பல அழகிய வண்ணங்கள் கொண்ட விநாயகர் ரங்கோலி டிசைன்களை முயற்சித்து பாருங்கள்.
ஒரு சாதாரன பாஜக உறுப்பினர் கூட வினேஷ் போகத்தை தோற்கடித்து விடுவார் என பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். தலைமை சம்மதித்தால் ஹரியானாவில் பிரச்சாரம் நடத்த தயாராக இருப்பதாகவும், தனக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட 6 பேர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அம்மாவட்ட NCC ஒருங்கிணைப்பாளர் கோபு (47) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும், கோபு அவருக்கு உறுதுணையாக இருந்ததாகவும், சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் அவரும் கலந்து கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
*ஒரு ஆண்டின் 6 பருவங்கள்: பின்பனி காலம்- தை, மாசி மாதங்கள். *இளவேனில் காலம்- பங்குனி, சித்திரை மாதங்கள். *கோடை, முதுவேனில் காலம்- வைகாசி, ஆனி மாதங்கள். *கார் (மழை) காலம்- ஆடி, ஆவணி மாதங்கள். * இலையுதிர் காலம்- புரட்டாசி, ஐப்பசி மாதங்கள். *முன்பனி காலம்- கார்த்திகை, மார்கழி மாதங்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 92.38% அதிகரித்துள்ளதாக IMF அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2013ல் 1,857 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், காந்த 2023ல் அது 3,572 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2ஆம் இடத்தில் சீனாவும் இருக்கிறது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் F57 குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹொகடோ ஹொடொஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். 14.65மீ தூரம் குண்டு எறிந்து தனது சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் வீரர் யாஷின் 15.96மீ எறிந்து முதல் இடமும், பிரேசில் வீரர் தியாகோ 15.06மீ என்ற அளவில் 2ஆம் இடமும் பிடித்தனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா கைப்பற்றிய பதக்கங்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.